உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ||_ _

அப்பாத்துரையம் - 36

பருமக்களிலும் கிட்டத்தட்ட அனைவரும் எதிரிகளுடன் சேர்ந்து போரிட்டனர். ஆர்தர் வீரர்கள் தொகையில் குறைவு. அவர்கள் தம் புதிய வீரப்பட்டத்திற்குப் புகழ் தேட அரும்பாடுபட்டுப் போர் செய்தும் அடிக்கடிப் பின்வாங்க நேர்ந்தது. ஆனால், ஆர்தர் சென்றவிடமெல்லாம் அவரின் வாள் எக்ஸ்காலிபர் எதிரிகளின் குருதி குடித்துக் கொம்மாளமடித்துக் கொக்கரித்தது. மாலையில் ஆர்தரும் வீரரும் தன் கடைசித் தாக்குதலை நடத்தி எதிரிகள் அனைவரையும் வெருண்டோடச் செய்தார்கள். பெருமக்கள் அன்றடைந்த திகில் ஆர்தர் ஆட்சி முடியும் வரை அவர்களை விட்டு நீங்க வில்லை.

போர் முடிந்த பின்னும் அமைதியை ஏற்படுத்தும் பொறுப்பும் மீந்திருந்த புறப்பகைவரை ஒடுக்கும் பொறுப்பும் ஆர்தரையும் அவர் வீரரையும் சார்ந்தன. ஆகவே, கினிவீயரைச் சென்று காண அவருக்கு நேரமில்லை. ஆயினும், கினிவீயர் இல்லாமலும் அவர் தம் வாழ்க்கை நிறைவடையாதென் றெண்ணினார். ஆகவே, தம் வீரருள் தலைசிறந்தவரான லான்ஸிலட்டை லியோடகிராமிடம் அனுப்பிப் பெண் பேசச் செய்தார்.

லியோடகிராம் முதலில் பெரிதும் தயங்கினார். ஆர்தர் ஆட்சியோ புதிய ஆட்சி, மேலும் பலர், அவர் அதர் பிள்ளையல்லர்; கார்லாய்ஸின் பிள்ளையோ, அல்லது வேறு துணையற்ற எடுப்புப் பிள்ளைதானோ என்று பேசிக் கொள்வதையும், பெருமக்கள் வெறுப்பதையும் கேட்டு அவர் பின்னும் கலக்கமடைந்தார். ஆனால், லான்ஸிலிட்டுடன் சென்ற பெடிவியர்ப் பெருந்தகை24 அவர் பிறப்பைப் பற்றி மெர்லின் கூறியதையும் அவர் கையிலிருக்கும் எக்ஸ்காலிபன் சிறப்பையும் அவர் வெற்றிகளையும் எடுத்துச் சொன்ன பின், ஆர்தர் சார்பாக லான்ஸிலட் கினிவீயர் இளவரசியைக் காண அவர்

ணங்கினார்.

25

வாழ்க்கையின் போக்கில் காற்றில் பறக்கத்தகும் சிறிய துரும்புகள் ஊழ்வலியின் ஆற்றலிற்பட்டு மலைகளையும் வீசியெறியும் பெருஞ்சுரங்க வெடிகளாக மாறிவிடுகின்றன. ஆர்தர் நேரில் கினிவீயரை வந்து மணக்க நேராமல் லான்ஸிலட்டை அனுப்பியபோது அவர் வாழ்வின்