உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

33

“இந்தக் கழிகள் எதற்கு உதவும்? என்று இளஞ்சாத்தன் தன் நண்பனிடம் கேட்டான்.

"நாம் தங்குமிடத்தில், இதைக் கொண்டு பெருக்கிக் கொள்ளலாம். வேப்பங்கழி தூசு மட்டுமின்றி, நச்சு வாடைகளையும் அகற்றும்" என்று அவன் அமைதியாக விடையளித்தான்.

விடை இளஞ்சாத்தனுக்கு மனநிறைவளிக்கவில்லை. ஆனால் அவன் மீண்டும் கேள்வி கேட்கவில்லை. நண்பன் செயல்கள் அவனுக்குப் புதிராயிருந்தன. ஆனால் அவன் அறிவும் ஆற்றலும் எதிர்பாராத ஆர்வம் ஊட்டின.

அவர்கள் வழி பாறையடர்ந்ததாயிற்று; கீழே நிலம் வெப்ப முடையதாயிருந்தது. ஆனால் வானமெங்கும் முகில்கள் திரண்டு வருவது போன்றிருந்தது. "இவ்வளவு மேகங்கள் இருந்தும் ஏன் வெப்புக் குறையவில்லை?” என்று இளஞ்சாத்தனால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

"தம்பி, இவை மேகங்கள் அல்ல. இவை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிய மலைகள், நாம் நடப்பதே அவற்றில் முதல் மலையிலேதான்” என்றான்.

இளஞ்சாத்தன் அந்த அழகிய மலைக்காட்சியில் ஈடுபட்டான். வெப்புத் தெரியவில்லை. ஆனால் மலையுச்சி இன்னும் நெடுந்தொலைவிலேயே இருந்தது. பகல் முழுதும் நடந்தும் அது முன் இருந்த தூரத்திலேயே தெரிந்தது.

66

'ஒரு நாளைக்கு இவ்வளவு நடந்தது. போதும், அருகிலே ஏதோ ஊர் இருப்பதுபோலத் தெரிகிறது. சிறிது அங்கே சென்று தங்கிப் போகலாம்” என்று இளஞ்சாத்தன் தெரிவித்தான். வழித்துணை வேலன் மகிழ்வுடன் இணங்கினான்.

அது சிற்றூரன்று, ஒரு பெரிய நகரமாயிருந்தது. பல தெருக்களில் அலைந்தபின், அவர்களுக்கு ஓர் அருந்தகத்தில் தங்க அறை கிடைத்தது. அங்கே தங்கி இருவரும் நகரைச் சுற்றிப் பார்த்தார்கள்.

அன்றுமாலை அருந்தகத்தின் நிலாமுற்றத்தில் மக்கள் கூடியிருந்தனர். அழகிய பூவணிகளால் ஒரு மேடை ஒப்பனை