உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10. அடிமையும் அரிமாவும்

ஹாரியுடன் பேசியதனால் டாமிக்குத் தன் குற்றங்கள் தெரிந்தன. ஆனால் அதைத் தெரிந்து நடப்பதில் அவனுக்கு இன்னும் பயிற்சி ஏற்படவில்லை. மேலும் ஹாரி சுருக்கமாகக் கூறிய பல செய்திகளை அவன் எண்ணிப் பார்க்கப் பார்க்க, புதிய ஐயங்கள் தோன்றின. வாய்ப்புக்கள் இல்லாததனால் பலர் அடுத்தவர்கட்கு உழைக்க நேருகிறதென்றால், அவர்கள் ஏன் அவ்வாய்ப்பைப் பெற முடியவில்லை என்று அவன் தனக்குத் தானே கேட்டுக் கொள்ளலானான். அதுபோல அடிமையா யிருக்கும் கறுப்பர்கள் அதை ஏன் தாமாக விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவனுக்குப் புரியவில்லை.

இந்நிலையில் ஆசிரியர் ஹாரியிடம் மறுநாள் படிக்கும் படி கூறிய கதை இக்கருத்தை விளக்க ஏதுவாயமைந்தது. ஹாரி வாசித்த கதை அடிமையும் அரிமாவும் என்பதே.

(கதை)

உரோம நாட்டினர் அயல் நாட்டு மக்களை அடிமை களாக வைத்து வேலை வாங்குவது வழக்கம். உரோமநாட்டுப் பெருமகன் ஒருவனிடம் அண்ட்ராக்ளிஸ் என்ற ஒரு அடிமை இருந்தான். பெருமகன் அவனை ஈவிரக்கமின்றிக் கொடுமையாக வேலை வாங்கினான். இப்படி வேலை செய்வதைவிட உயிரை விட்டாலும் நலம் என்று அவனுக்கு எண்ணமுண்டாயிற்று. தப்பியோடி அகப்படும் அடிமைகளை அந்நாட்டு அரசியலார் கொலைத் தண்டனைக் காளாக்குவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். 'அகப்பட்டால் என் தலை போகிறது, அன்றேல் விடுதலை பெறுவேன்' என்று எண்ணியவனாய் அவன் ஓரிரவு ஓடினான். ஆனால் அவன் தப்பிப்பிழைக்கு முன் தலைவன் அவனைப் பிடித்துவிட்டான். அரசியலின் பெருமக்கள்