உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(126)

II.

அப்பாத்துரையம் - 28

மன்றத்தார் அவனுயிர் போக்குவதிலேயே ஒரு புதிய முறையைக் கையாண்டனர். அவனை விலங்குக் காட்சியிலுள்ள சிங்கத்துக்கு இரையாக்கி யாவரும் காண அவன் கொலையை ஒரு காட்சியாக்க எண்ணினர்.

சிங்கக்

விலங்குக் கொட்டகையில் பெருந்திரள் மக்களிடையே கூண்டு நடுவரங்கில் கொண்டுவரப்பட்டது. அண்ட்ராக்கிளிஸை நடுவரங்கில் தள்ளி வெளிவரமுடியாத படி கதவை அடைத்தார்கள். அதன்பின் சிங்கத்தின் கூண்டு திறக்கப்பட்டது. அச்சிங்கம் காட்டிலிருந்து அண்மையிலேயே பிடிபட்டுக் கொண்டுவரப்பட்ட அடங்கா விலங்காயிருந்தது. அதனை அடக்கும் எண்ணத்துடன் அதை ஒன்றிரண்டு நாளாகப் பட்டினியாகவும் போட்டு வைத்திருந்தனர். ஆகவே அது கூண்டு திறந்தவுடன் அனைவரும் எதிர்பார்த்தபடியே உங்காரத்துடனும் பசி வெறியுடனும் கொட்டகை முகடதிர முழங்கிக்கொண்டு அண்ட்ராக்ளிஸை நோக்கிப் பாய்ந்தது.

காட்சியாளர்கூட அம்முழக்கம் கேட்டு நடுநடுங்கினர். அண்ட்ராக்ளிஸும் தன் முடிவு வந்ததறிந்து சாக ஒருங்கி நடுங்கி நின்றான். ஆனால் யாவரும் வியக்கும் வண்ணம் சிங்கம் சிறிது தூரத்தில் வந்ததும் தலைநிமிர்ந்து அண்ட்ராக்ளிஸைப் பார்த்து நின்றுவிட்டது. பின் அவனை நாற்புறமும் மோந்து பார்த்தபின் முற்றிலும் அமைதியடைந்து நாட்டுநாய்போல் வால் குழைத்து அவன் காலடியில் படுத்து மகிழ்ச்சி தெரிவித்தது.

காட்சியாளர்கள் அடைந்த வியப்பில், அவர்கள் தாங்கள் காணவந்த காட்சியைக் காணாத ஏமாற்றத்தைக் கூட மறந்தனர். ஏனெனில் எதிர்பாராத இக்காட்சி அவர்களுக்கு எல்லையிலாப் புதுவிருந்தாயமைந்தது. யாவரும் நெருக்கித் தள்ளி அக்காட்சியைக் காணலாயினர்.

அரசியல் தலைவனும் பெருமகனும் அண்ட்ராக்ளிஸை அழைத்துச் “சிங்கம் எப்படி உன்னிடம் அடங்கிற்று. நீ என்ன மாயம் செய்தாய்?” என்று கேட்டனர்.

அண்ட்ராக்ளிஸ் "ஐயன்மீர், நானும் உங்களைப் போலவே முதலில் வியப்படைந்தேன். சாவை மட்டும்தான் எதிர்பார்த்துச் சென்றேன். சிங்கம் நாய்போல் அடங்கியது கண்டபின் எனக்கு உண்மை விளங்கிற்று. இந்தச் சிங்கம் காட்டு