உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

127

விலங்கேயாயினும் நெடுநாளைக்கு முன் ஒருநாள் அதற்கு நான் செய்த நன்மையால் பழகிற்று. இவ்வளவு நாள் கழித்து மனிதர் மறந்தாலும் அது மறவாதிருப்பது காண நானும் வியப்பே அடைகிறேன்” என்றான்.

யாவரும் அந்நிகழ்ச்சியை விளக்கிக் கூறும்படி

கோரினர்.

"நான் அடிமையாவதற்கு முன் எங்கள் நாட்டின் காட்டில் ஒரு நாள் வேட்டையாடிக் கொண்டிருந்தேன். முள்ளட ர்ந்த வழியில் நடந்த அலுப்பால் ஓரிடம் ஓய்வாயிருந்தேன். அச்சமயம் எதிர்பாரா வகையில் என் அருகே உறுமல் போன்ற அரவம் கேட்டுத் திரும்பினேன். ஒரு பெரிய சிங்கம் என் அருகில் நின்றிருந்தது. தப்பியோட முடியாத அளவு அது அருகிலிருப்பது கண்டு நான் வெல வெலத்துப்போய் இன்றுபோலவே சாவை எதிர்நோக்கி நின்றேன். ஆனால் சிங்கம் என்னைக் கொல்ல முயலாமலிருந்ததுடன் என்னை இரக்கமாகப் பார்த்துத் தன் காலில் ஒன்றை என்னிடம் தூக்கிக் காட்டிற்று. அது சற்று நொண்டிவந்ததையும் நான் அப்போதுதான் எண்ணிப் பார்த்தேன். சாவுக்குமேல் வேறு என்ன வர முடியும் என்ற துணிவுடன் நான் அது நீட்டிய முன் காலை மெல்லப்பிடித்தேன். அது வலி தாங்காது அலறிற்று. அதன்மேல் நான் ஊன்றிக் கவனித்தபோது அதன் அடியில் ஒரு முள் குத்திக் கொண் டிருப்பது கண்டேன். என் முழுத்திறத்தையும் காட்டி ஆதர வாக அம்முள்ளை எடுத்து அதனைப் படுக்க வைத்தேன். அதுவும் பூனைபோல் வலிதீரும் வரை படுத்திருந்தது. வலிதீர்ந்தால் எப்படியும் அது நம்மைக் கொன்றுவிடவே செய்யும் என்று எண்ணி அது தூங்கியவுடன் போக எண்ணினேன். ஆனால் அது தன் உணவில் எனக்குப் பங்கு கொடுத்து என்னை ஆதரித்ததுடன் உறக்கத்திடையிலும் நான் போவதுகண்டு விழித்து என்னைக் கனிவுடன் பார்த்தது. ஆகவே அது நோய் நீங்கி வெளியேறும்வரை காத்திருந்தேன். போகும்போதும் அது என்னிடம் பரிவுகாட்டியே சென்றது.

66

இவ்வளவு காலத்துக்குப்பின்னும் இச்சிங்கம் என் செயலையும் நினைத்து என்னையும் அடையாளம் அறிந்து கொண்டு நட்பாய் இருக்கிறது” என்றான்.