உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

அப்பாத்துரையம் – 37

அவன் ஆர்லண்டோ என்பதை அறிந்தார்கள். ஆனால், இவர்கள் யார் என்பதை அவன் தெரிந்து கொள்ளவில்லை. யாரோ ஓர் அழகான இடைப்பையன் என்று எண்ணி அவன் ரோஸலிண்டுடன் பேசினான்.அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது, "யாரோ ஒரு பித்தன் எங்கள் மரங்கள் எல்லாவற்றிலும் என்ன என்னவோ எழுதிப் பாழ்படுத்துகிறான். அவனைக் கண்டால் நான் வாளாவிடேன்,” என்று ரோஸலிண்ட் கூறினாள்.

66

66

“நான்தான் அந்தப் பித்தன்”, என்றான் ஆர்லண்டோ, 'அத்தன்மையான பித்து உன்னிடம் இருப்பதாகத் தெரிய வில்லையே," என்றாள் ரோஸலிண்ட், 'உண்மையாகக் கூறுகின்றேன், அப்பித்து என்னிடம் உள்ளது. அதற்காக எனக்கு நீங்கள் சொல்லக்கூடிய நன்மொழிகள் என்ன?” என்று ஆர்லண்டோ கேட்டான். "நீ நாள்தோறும் எங்களிடம் வரமுடியுமானால், அதை ஒழிக்க வழி கூறுகின்றேன். அவ்வாறு வந்தால், நாளடைவில் நீயே வெட்கமடையும் படியாகச் செய்துவிடுவேன்; உன்னுடைய பித்து ஒழியும்,” என்று ரோஸலிண்ட் கூறினாள்.

அவளுடைய பேச்சில் அவனுக்கு நம்பிக்கை ஏற்பட வில்லை. ஆனாலும், அவ்வாறே வருவதாக அவன் உடன் பட்டான்; நாள்தோறும் அவர்கள் இருந்த வீட்டிற்கு வந்து வந்து போனான். அவன் மனம் சிறிதும் மாறவே இல்லை. அவன் அவர்களோடு நாள்தோறும் பழகி விளையாடிக் கொண்டு வந்தான். ஆனால், அந்த இடைப்பையன்தான் ரோஸலிண்ட் என்பதை அறியவே இல்லை; தான் ரோஸலிண்ட் மீது கொண்டிருந்த அன்பை மறக்காமல் சொல்லிக் கொண்டிருந்தான். ரோஸலிண்ட் அவன் உள்ளத்தில் இருந்த உண்மை அன்பை உணர்ந்துகொண்டாள்; இவ்வாறே நாட்கள் பல கழிந்தன.

ஆர்லண்டோவின் பழக்கத்தால், தன்னுடைய அன்பான தந்தை வாழுமிடம் வாழும்வகை முதலியவைகளை ரோஸலிண்ட் தெரிந்து கொண்டாள். எனினும், அந்த அரசனே தன்னுடைய தந்தை என்பதை அவனுக்குத் தெரிவிக்கவில்லை. ஒருநாள் ரோஸலிண்ட் காட்டு வழியில் தந்தையைக் கண்டாள். அரசன் தன்னுடைய மகளைப் பற்றி ஒன்றும் அறிந்துகொள்ளவில்லை. அவள் ஆண் உடை உடுத்தி இருந்தமையால், அவளை ஓர்