உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

29

உணவு கேட்டேன்," என்று ஆர்லண்டோ தெரிவித்தான். "அப்படியானால் விரைந்து சென்று அவனை அழைத்து வருக; அவன் வருகின்ற வரைக்கும் நாங்களும் உண்ணாமல் காத்திருப்போம். விரைந்து செல்க," என்று வேண்டினான் அரசன். ஆர்லண்டோ கார் எனக் கடிது சென்றான். கிழவனைத் தூக்கிக் கொண்டு விரைந்து மீண்டான். கிழவன் கண்திறந்து நோக்கினான். அனைவரையும் கண்டான். அரசனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி ஆதமும் ஆர்லண்டோவும் உண்டனர். அப்போது அரசனுடைய நண்பன் ஒருவன் இன்னிசை பாடினான்.வாயுணவும் செவியுணவும் பசியையும் களைப்பையும் போக்கின; ஊக்கமும் மகிழ்ச்சியும் அளித்தன.

அரசன் ஆர்லண்டோவை அன்போடு நோக்கி “உன் வரலாற்றை இனிக்கூறுக,” என்றான். தான் சர் ரோலண்டின் மகன் என்பதை அவன் அறிவித்தவுடன், அரசன் அன்புமிக்கவனாய், தனக்கும் சர் ரோலண்டுக்கும் இருந்த நட்பை நினைந்து உருகினான்; ஆர்லோண்டாவையும் கிழவனையும் தன்னுடன் இருக்கச் செய்தான்.

4. ரோஸலிண்ட் தந்தையைக் காணுதல்

அங்கே இருந்துவரும் நாளில், ஆர்லண்டோ ரோஸலிண்ட் என்பவள் மீது தான் கொண்ட அன்பைப் பெருக்கினான்; நாள்தோறும் பலமுறையும் அவளை நினைத்துக் கொண்டான்; பல பாட்டுக்களையும் பாடினான். அக்காட்டில் இருந்த பல மரங்களிலும் அவளுடைய பெயரைப் பொறித்து வந்தான்.

அரசன் முதலானவர்கள் இருந்த இடம் காடு. ஆகையால் அங்கே இடையர்கள் பலர் வந்து போவது உண்டு. இடையர்களில் ஒருவனாக வாழ்ந்துவந்த ரோஸலிண்ட், தன் பெயர் இவ்வாறு மரங்களில் பொறிக்கப் பட்டிருதலை அறிந்தாள். "இவ்வாறு யார் எழுதி வைத்திருக்கக்கூடும்? அவர் நோக்கம் என்ன? இதன் காரணத்தை அறிவது எப்படி?” என்று பலவாறு ரோஸலிண்டும் ஸீலியாவும் எண்ணத் தொடங்கினார்கள்.

ஒருநாள் அவர்கள் காட்டில் சென்றுகொண்டிருந்தபோது, இளைஞன் ஒருவன் வருதலைக் கண்டார்கள். அவன் நெருங்கி வந்தவுடன், கழுத்தில் அணிந்திருந்த மணிவடத்தைக் கண்டு,