உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

அப்பாத்துரையம் – 37

இறுதியில் ஆர்டென் காட்டிற்கே வந்து சேர்ந்தனர். வழி நடந்த களைப்பு ஒருபுறம்; பசியின் கொடுமை ஒரு புறம்; இவற்றால் அவர்கள் வாடினார்கள் ஆதம் வயதானவன்; ஆகையால் அடி எடுத்துவைக்கவும் முடியாத அவ்வளவு சோர்வு உற்றான்; கீழே விழுந்தான், “பசி மிகக் கொடியது; என்னை வாட்டுகின்றது; எனக்கு இடுகாடு இதுதான் போலும்,” என்று கூறினான்.உடனே, ஆர்லண்டோ அவனைத் தூக்கிச் சென்று, மரநிழலில் இருக்கச் செய்து, "இதோ வந்துவிட்டேன்; நான் உணவு கொண்டுவந்து உன்னைக் காப்பாற்றுவது உறுதி. நீ அஞ்சாதே,” என்று சொல்லிவிட்டு விரைந்து ஓடினான்.

விரைந்து ஓடின ஆர்லண்டோ ஓர் இடத்தில் சிலர் அமர்ந்து உணவு உண்பதைக் கண்டான். “அந்த உணவை நீங்கள் உண்ணலாகாது; பொறுங்கள்,” என்று சொல்லிக்கொண்டே, தன்வாளை உறையிலிருந்து எடுத்துக்காட்டி அச்சுறுத்த முயன்றான். அங்கு இருந்தவர்களில் பிரடரிக் தமையனாகிய அரசனும் ஒருவன். அவன் ஆர்லண்டோவின் செயலைக் கண்டு வியந்தான். “நீ யார்? ஏன் இப்படிச் செய்கின்றாய்?" என்று வினவினான்.“பசியின் கொடுமையால் இவ்வாறு செய்கிறேன்” என்று ஆர்லண்டோ விடை கூறினான். “எங்களுடன் நீயும் அமர்ந்து உண்ணலாமே,” என்றான் அரசன். இச்சொற்களைக் கேட்டதும் ஆர்லண்டோ வெட்கமுற்று, வாளை உறையில் இட்டு, அரசரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான், “ஐயா, வ்வாறு அச்சுறுத்தினால் உணவு பெற முடியும் என்றும், இங்கே வாழ்கின்றவர்கள், அப்படிப்பட்ட கீழ்மக்களாக இருப்பார்கள் என்றும் தவறான எண்ணங் கொண்டிருந்தேன்,” என்று கூறினான்.

66

"அப்பா! எங்களைக் காட்டு விலங்குகள் என்று கருதவேண்டா. நாங்கள் பட்டணங்களில் வாழ்ந்த மக்களே; ஏழைகளின் துன்பம் எங்களுக்குத் தெரியும். விருந்தோம்பும் அறமும் எங்களுக்குத் தெரியும். ஈகையும் இரக்கமும் எங்களுக்குப் புதியன அல்ல. எங்களோடு உண்டு பசி தீர்க. பிறகு எல்லாம் பேசலாம்," என்று அரசன் அவனை உண்ணுமாறு அழைத்தான்.

"ஐயா! உங்கள் அன்பே அன்பு! நான் எனக்காக உணவு கேட்கவில்லை. என்னோடு நடந்து வந்து சோர்ந்து பசியால் நலிந்து இறக்குந் தறுவாயில் உள்ள கிழவன் ஒருவனுக்காகவே