உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

31

இளைஞன் என்றே அவன் கருதினான். “தம்பி! நீ யார்?" என்று அவன் ரோஸலிண்டைக் கேட்டபோது, அவள், "ஐயா! தங்களைப்போல் நானும் உயர்குடியில் பிறந்தவனே," என்றாள். இவ்விடையைக் கேட்ட அரசன் வியந்தான். “இவனைப் பார்த்தால் இடையனாகத் தெரிகின்றான்; நம்மைப் போல உயர் குடியில் பிறந்தவன் என்று கூறுகின்றான்,” என்று சிரித்தான். ரோஸலிண்ட் தொடர்ந்து ஒன்றும் கூறாமல் வாளா இருந்தாள். "இப்போது உண்மையைக் கூறாமல் இருத்தல் வேண்டும்; பொறுத்திருந்து பிறகு கூறலாம்," என்று அவள் எண்ணினாள்; ஒன்றும் கூறாமல் வந்து விட்டாள்.

5. ஆலிவர் ஸீலியாவைக் காதலித்தல்

ஆர்லண்டோ வழக்கம்போல் ரோஸலிண்ட் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான். ஒருநாள் போகும் வழியில் மண்மீது படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஒருவனைக் கண்டான். அவன் கழுத்தில் பெரிய பாம்பு ஒன்று சுற்றியிருத்தலையும் பார்த்தான். ஆர்லண்டோ நெருங்கிவரக் கண்ட அப்பாம்பு அவன் கழுத்தை விட்டு விரைந்து ஓடி மறைந்து கொண்டது. அவன் இன்னும் நெருங்கிச் சென்றபோது, பெண்சிங்கம் ஒன்றைக் கண்டான். தூங்குகின்றவன் விழித்து எழுந்தவுடன் அவனை அடித்துக் கொல்வதற்காக அது காத்திருந்தது, ஆர்லண்டோ அஞ்சாமல் சென்று தூங்குகிறவன் யார் எனக் கண்டான்; அவன் தன் அண்ணனாகிய ஆலிவர்தான் என்று அறிந்தான். அப்போது, அவன் மனத்தில் பல எண்ணங்கள் தோன்றின. அவன் தனக்குப் பல தீங்கு செய்தது, தன்னைக் கொளுத்திக் கொல்ல முயன்றது, அவனுடைய கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் தானும் வேலையாளும் காட்டிற்கு வந்தது முதலிய எல்லாவற்றையும் அவன் நினைத்தான். “இத்தகைய கொடியவனுக்கு ஏன் உதவி செய்தல் வேண்டும்? அவனைப் பாம்பு கடித்தாலும் என்ன? சிங்கம் கொன்றாலும் என்ன?” என்று முதலில் எண்ணினான். ஆயினும் இரக்கமுள்ள அவன் மனம் உடனே மாறிவிட்ட உடன் பிறந்த அண்ணன் என்ற அன்பு வந்தது. உடனே அவன் தன் வாளை உருவிக்கொண்டு சென்று ஆண்மையுடன் சிங்கத்தை எதிர்த்தான்; அதனைக் கொன்றான். அவ்வாறு அதனை