உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

அப்பாத்துரையம் – 37

எதிர்த்துக் கொன்றபோது அஃது அவனுடைய கையில் கீறிப் புண்படுத்திவிட்டது.

அவன் சிங்கத்தை எதிர்த்துக்கொண்டிருந்தபோது ஆலிவர் விழித்து எழுந்து தன் தம்பியைப் பார்த்தான். நிகழ்ந்தன எல்லாம் அறிந்தான்; அவன் ஆற்றிய அரிய உதவியை எண்ணி எண்ணி நெஞ்சம் நெக்கு உருகினான்; தான் செய்த கொடுமைகளை நினைந்து நினைந்து மனம் மயங்கி வருந்தினான்; குற்றம் உணர்ந்தான்; குணவான் ஆனான்; “அன்பு நிறைந்த தம்பி! எனது பொறாமையால் யான் செய்த எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்,” என்று வேண்டினான். ஆர்லண்டோ அண்ணன் மனம் மாறியதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தான். பழையன எல்லாம் மறந்து விட்டதாக அண்ணனிடம் கூறினான். எங்கிருந்தாலும் தம்பியைத் தேடிக்கொல்லும் துணிவு கொண்டு காட்டிற்கு வந்த ஆலிவர் அன்று முதல் உண்மையான அன்புடையவனாய் ஆர்லண்டோவுடன் கூடிவாழத் தொடங்கினான்.

ஆர்லண்டோவின்

கைப்புண்ணிலிருந்து இரத்தம் பெருகிற்று; மிகுதியாகப் பெருகிற்று. அக்காரணத்தால், அவன் அன்று ரோஸலிண்ட் இருப்பிடத்திற்குச் செல்லவில்லை; தனக்கு உற்றதை ரோஸலிண்டுக்கு அறிவிக்குமாறு அண்ணனை அனுப்பினான்.

ஆலிவர் அவ்விடம் சென்று அவர்களைக் கண்டு நிகழ்ந்தன எல்லாம் கூறினான்; தான் செய்த தீங்குகளையும் அவன் செய்த பேருதவியையும் விளக்கமாக உரைத்தான்; அவன் கையினின்றும் பெருகிய இரத்தத்தைத் துடைத்த சிறு துணியைக் காட்டினான். அச்சிறு துணியைக் கண்டதும், ரோஸலிண்ட் மயங்கிச் சோர்ந்தாள். ஆனால், ஆலிவர் மனம் உருகிப் பேசின பேச்சைக் கேட்டஸீலியா அவன் மீது பேரன்பு கொண்டாள்; அவளுடைய அன்பைக் குறிப்பால் அறிந்த ஆலிவரும் அவளை மணக்க விரும்பினான். ரோஸலிண்ட் மயக்கம் தெளிந்து எழுந்தபின், கு உண்மையாக மயக்கம் வரவில்லை. மயக்கம் வந்ததுபோல் நடித்துக் காட்டினேன். இதை ஆர்லண்டோவுக்குச் சொல்லுக" என்றாள்.

66

எனக்