உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

33

ஆலிவர் மீண்டு சென்றதும், தன் தம்பிக்கு அவ்வாறே ரோஸலிண்டின் மயக்கத்தைப் பற்றிக் கூறினான்; தான் ஸீலியாமீது காதல் கொண்டதையும் உரைத்தான்; “நான் அவளை மணந்து கொண்டு இக்காட்டிலேயே வாழ ஆவல் கொண்டிருக்கிறேன்,” என்று தெரிவித்தான். ஆர்லண்டோ அவ்விருப்பம் நிறைவேறுமாறு தான் முயற்சி செய்வதாகக் கூறினான். இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, ரோஸலிண்ட் வருதலைக் கண்டான் ஆர்லண்டோ. “அண்ணா இது நல்ல சமயம் இவன் வந்து விட்ட படியால், இவனுடைய தங்கை தனியாக இருப்பாள். நீ சென்று அவள் திருமணத்திற்கு உடன்படுகின்றாளா என்று தெரிந்துகொண்டு வரவேண்டும்,' என்று அண்ணனிடம் சொன்னான். ஆலிவரும் உடனே புறப்பட்டுச் சென்றான்.

""

ரோஸலிண்ட் வந்ததும், அவனுடைய கைப் புண்ணைக் குறித்துக் கேட்டு அறிந்தாள். பிறகு, ஆலிவர் காதலைப்பற்றிய பேச்சு நிகழ்ந்தது. அப்போது ஆர்லண்டோ, "நாளையே அவர்கள் இருவர்க்கும் திருமணம் நடைபெறும். ஆனால், எனக்கும் ரோஸலிண்டுக்கும் திருமணம் என்று நடைபெறுமோ? நாளையே அதுவும் நடைபெறக் கூடுமானால், எவ்வளவு மகிழ்ச்சி அடைவேன்,” என்று என்று உண்மையாகவே தான் கொண்ட பேராவலைத் தெரிவித்தான். "நீ உண்மையாகவே காதல் கொண்டு ரோஸலிண்டை மணக்க விரும்பினால், என்னால் ஓர் உதவி செய்ய முடியும். எனக்கு என்னுடைய சிறிய தந்தையார் கற்றுக்கொடுத்த மந்திர வலியால் நாளையே அவளை இங்கு வருவிக்கின்றேன்,” என்று ரோஸலிண்டு கூறினாள்.ஆர்லண்டோ அதனை நம்பவில்லை. ரோஸலிண்ட் அவனுக்கு உறுதி கூறினாள்.

ஆலிவர் ஸீலியாவின் உடன்பாடு பெற்று மீண்டான். ஆர்லண்டோ அவனுடன் சென்று அரசனிடம் எல்லாம் கூறினான்.

6. இழந்த உரிமை எய்தப் பெறுதல்

திருமணங்கள் இரண்டனையும் காண்பதற்காக அரசனும் நண்பர்களும் கூட்டினார்கள்; மணமகள் ஒருத்தி இருத்தலும் மற்றொருத்தி இல்லாமையும் கண்டு வியந்தார்கள்! "இடையன்