உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

அப்பாத்துரையம் - 37

"மாக்பெத் இனி உறங்குதல் இல்லை. அவன் உறக்கம் ஒழிக, அவன் தூக்கத்தைக் குலைத்தான்,” என்று ஒரு குரல் அவனுக்குக் கேட்டது. அந்த ஒலி எல்லோரும் கேட்கும்படி இருந்ததாக மாக்பெத் எண்ணினான்.

66

று

உடனே, அவன் தன் மனைவியிடம் சென்றான். “இவர் அந்தக் காரியத்தை நிறைவேற்றவில்லை என்று தெரிகிறது. இவ்வளவு நேரம் ஆகியும் திரும்பி வராத காரணம் யாதோ? என்ன தடை ஏற்பட்டதோ?” என்று எண்ணிக் கொண்டிருந்தாள். அவள், தன் கணவன் திரும்பியதும், அவனுடைய முகக்குறியைக் கண்டு, "ஏன் ஏன் இவ்வளவு வருத்தத்தோடும் கவலையோடும் வருகின்றீர்கள்? தாங்கள் செய்த செயல் தங்களைக் கோழை ஆக்கிவிட்டதோ? ஆண்மையோடு இருங்கள். விரைந்து சென்று கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள். இரத்தத்தை மற்றவர்கள் பார்த்தல் ஆகாது; அஞ்சாமல் இருந்து இன்னும் செய்வன திருந்தச் செய்தல் வேண்டும்” என்று சொன்னாள். அவனுடைய கையிலிருந்த கட்டாரியை அவள் வாங்கிக் கொண்டு, அதில் இருந்த இரத்தத்தை உறங்கிக் கொண்டிருந்த வேலையாட்களின் முகங்களில் தடவிவிட்டு, கட்டாரியையும் அருகே வைத்துவிட்டு விரைந்து மீண்டாள்.

இரவு கழிந்தது; பொழுது விடிந்தது.கொலையைப் பலரும் அறிந்தனர்: அதை மறைத்து வைத்தல் இயலாது அன்றோ? மாக்பெத்தும் அவன் மனைவியும் துயர்மிக்கவராய்த் தோன்றினர்.வேலையாட்களின் முகங்களிலிருந்த இரத்தக் கறையும். அருகே இருந்த கட்டாரியும் அவர்களைக் குற்றவாளிகளாகக் காட்டின. ஆயினும், பலரும் மாக்பெத் மீது ஐயுற்றனர். வேலையாட்கள் அரசனைக் கொல்லக் காரணம் இல்லை என்றும், அதனால் அவர்கள் பெறும் பயன் ஒன்றும்

ல்லை என்றும், மாக்பெத்தே அரசுரிமையைக் கவரும் எண்ணங்கொண்டு இவ்வாறு செய்தான் என்றும் தம்முள் பேசிக் கொண்டனர். அரசனுடைய மைந்தர் இருவரும் ஓடிச் சென்றுவிட்டனர்; அவருள் மூத்தவன் மால்காம் இங்கிலாந்து அரசனிடம் அடைக்கலம் புகுந்தான்; இளையவன் டனால்பின் அயர்லாந்து சேர்ந்தான்.