உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

||_ _ _

அப்பாத்துரையம் – 37

நூல்களையும் மந்திரக் கோலையும் மண்ணில் ஆழப் புதைத்தான். இவ்வாறு பகையைவென்று தம்பியுடனும் நேபல்ஸ் அரசனுடனும் மீண்டும் நட்புக் கொண்டபிறகு அவன் எண்ணம் நிறைவேறியது எனலாம். ஆனால் ஒருகுறை இருந்தது. தன் தாய்நாட்டிற்குத் திரும்பிச்சென்று, அரசுரிமையைத் திரும்பப் பெற்றுப் பெர்திநந்து இளவரசர்க்கும் மிராந்தாவுக்கும் நடைபெறும் திருமணத்தைக் கண்டு களிப்பதே குறையாக இருந்தது. நேபல்ஸ் நாட்டிற்குத் திரும்பிய உடனே அத் திருமணத்தை மிகமிகச் சிறப்பான முறையில் விரைவில் நடத்துவதாக நேபல்ஸ் மன்னன் தெரிவித்தான். ஏரியலின் நல்ல துணை கொண்டு கடலில் இனிய பிரயாணம் செய்து முடித்து விரைவில் அவர்கள் அந்நாட்டை அடைந்தார்கள். திருமணம் இனிது நிறைவேற, அனைவரும் பெருமகிழ்ச்சி கொண்டனர்.

அடிக்குறிப்புகள்

1. Prospero

2. Miranda

3. Sycorax

4. Ariel

5. Milan

6. Antonia

7. Naples

8. Gonzalo

9. Ferdinand