உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

77

முதலாயினோர் வியந்தனர்; வருந்தினர். ஆனால், அவர்கள் அரசன் செய்கையில் குறுக்கிட்டுத் திருத்தும் ஆற்றல் உடையவர்கள் அல்லர். அவர்களுள் 8கென்ட் தலைவன் ஒருவனே அஞ்சாது எழுந்தான், கார்டெலியாவின் சார்பாகப் பேசத் தொடங்கினான்; வாளா இருக்கத் தவறினால் கொன்று ஒறுப்பதாக அரசன் அச்சுறுத்தியும் அடங்கவில்லை.

"வேந்தர் பெருந்தகையே! யான் என்றும் அரசியல் முறைக்கு அடங்கி ஒழுகிவந்தேன். உம்மை வணங்கி வழிபட்டுவந்தேன்; தந்தை எனப் போற்றித் தலைவர் எனப் பின்பற்றினேன். என் உயிரை யான் பொருட்படுத்தியதும் இல்லை; உமது நன்மையின் பொருட்டு எப்போதும் அதனை இழக்க துணிந்து வாழ்ந்தேன். இப்போது என்மீது கடுஞ்சினங்கொண்டு நீர் பகைத்தபோதிலும், என் பழைய கொள்கையைக் கைவிடேன். உமது நன்மைக்காகவே இன்று உம்மை எதிர்த்துப் பேசவும் முன்வந்தேன். உம்முடைய பொருத்தமற்ற செய்கையே யான் முறை தவறி நடப்பதற்குக் காரணமாகும். இதுகாறும் யான் உண்மையான அமைச்சனாக

ருந்து என் கடமையை ஆற்றி வந்தது உமக்குத் தெரியும். நான் இன்று கூறுவதன் உண்மை உமக்கு விளங்குக் காலம் வரும். அப்போது ஆத்திரங்கொண்டு செய்த செய்கையைப் பற்றி நீரே வருந்துவீர். இதற்கு முன்னும் அவ்வாறு நேர்ந்ததில்லையோ? இளைய மகளுக்கு உம்மிடம் சிறிதும் அன்பு இல்லை என்றும் போலியுரைகள் பேசிப் புகழ்ந்த மற்றவர்கள் அன்புடையவர்கள் என்றும், நீர் கொண்ட முடிவு எவ்வகையிலும் பொருந்தாது. அதன் பயனை நீரே அனுபவிக்கப் போகின்றீர். வல்லார் வெறும் புகழுரையை விழைவாரானால், உண்மையாளர் வேறு என் செய்வார்? வெளிப்படையாக உண்மை உரைத்தலே தகுதி எனக் கொள்வர். யான் உமது அடிமை; என் உயிர் உம் ஆணை வழிப்பட்டது; அஞ்சுவது யாதொன்றும் இல்லை; என் கடமையை ஆற்றவேண்டுமன்றோ? ஆதலின் இச் சொற்களைக் கூறினேன்,” என்றான் அவன்.

குணக்குன்றாகிய கென்ட் தலைவன் உண்மையும் உரிமையுங் கொண்டு பேசிய பேச்சால் அரசன் சினம் மேலும் மூண்டது. தன் மருத்துவனைக் கொன்றுவிட்டுத் தன்னைப் பற்றிய தீராநோயைப் போற்றும் பித்துப்பிடித்த பிணியாளனைப் போல