சேக்சுபியர் கதைகள் - 1
83
அதுவும் உன்னைச் செய்வதாக; கடும் பாம்பின் நச்சுப் பற்களை விட நன்றிகெட்ட மக்களே கொடியர் கொடியர் என்பதை அப்போது நீ உணர்வாயாக!" என்று அவன் வெகுண்டு கூறினான். கானெரில் கணவனாகிய ஆல்பனித் தலைவன், தான் ஒரு தவறும் செய்யவில்லை என்பதைத் தெரிவிக்க முயன்றான். ஆனால், லியர் அதற்குச் செவிகொடாமல், சினம் பொங்கிய வனாய், குதிரைகளைப் பண்ணமைத்தவுடன் தன் வீரருடன் ரீகன் அரண்மனைக்குப் புறப்பட்டான். அப்போது அவன் எண்ணிய எண்ணங்கள் பல. கார்டெலியா ஏதேனும் தவறு இழைத் திருந்தாலும், அத் தவறு அவள் தமக்கை செய்த பெருங் குற்றத்துடன் ஒப்பிட்டால் எத்துணைச் சிறிது என்பதை அறிந்து அவன் அழுதான். கானெரில் போன்று சிறியோர் தன் பேராண்மையைக் கலக்க அழச்செய்யும்
வாய்ந்திருப்பதை எண்ணி வெட்கமுற்றான்.
ஆற்றல்
ரீகனும் அவள் கணவனும் தன் அரண்மனையில் மிக்க ஆடம்பரத்துடன் வாழ்ந்து வந்தனர். தன்னை வரவேற்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு, லியர் தன் ஏவலாள் கேயஸ் என்பவனைக் கடிதத்துடன் முன்னே அனுப்பியிருந்தான்.ஆனால், கானெரில் அதற்கு முன்பே தன் தங்கைக்குப் பல கடிதங்கள் எழுதி அனுப்பியிருந்தாள். அவற்றில் தந்தையின் மீது பலவாறு குறைகூறி, அவன் தன்னுடன் கொண்டுவரும் பெரும்படையை வரவேற்றுப் போற்றல் வேண்டா என்றும் அறிவித்திருந்தாள். அக்கடிதங்களைக் கொண்டு சென்றவனும் கேயஸும் ஒரே காலத்தில் ரீகன் அரண்மனை அடைந்தனர்; ஒருவரை ஒருவர் கண்டனர். கானெரில் கடிதங்களைக் கொணர்ந்தவன் யார்? லியரிடம் தகாத முறையில் நடந்த குற்றத்திற்காகக் கேயஸால் ஒறுக்கப்பட்ட ஏவலாளே ஆவான். அவன் பார்வை கேயஸுக்குப் பிடிக்கவில்லை. அவன் வந்த காரணத்தைப் பற்றிக் கேயஸ் ஐயுற்று அவனை வைது, தன்னுடன் வாட்போருக்கு வருமாறு அறைகூவினான். அவன் வரமறுத்தான். கேயஸ் தன்மானம் தூண்ட ஒருவகை உணர்ச்சிக் கொண்டு அவனை நன்றாகப் புடைத்தான். கொடிய செய்திகளைக் கொண்டு செல்லும்தீயோன் ஒருவனுக்கு அது தகுதியுடையதே. ஆனால், ரீகனும் அவள் கணவனும் அதைக் கேள்வியுற்றுக் கேயஸைத் தொழுவில் இட்டனர்; ரீகன் தந்தையாகிய அரசனிடமிருந்து வந்தவன்