உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

அப்பாத்துரையம் – 37

எண்ணினான். அன்று இரவே அதைக் காணவேண்டும் என்று காத்திருந்தான்; எப்போது பொழுது போகும்; எப்போது இரவு வரும் என்று பதைபதைத்தான்.

இரவு வந்தது. ஹெராரேஷியோவுடன் மார்ஸெல்லஸ் என்னும் வேறொரு காவலாளனுடனும் குறித்த மேடைக்குச் சென்றான் ஹாம்லெத். அன்றிரவு குளிர் மிகுதியாக இருந்தது; கடும் பனியும் இருந்தது. குளிர்மிகுந்த காரணத்தைக் குறித்து மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று, “இதோ வந்து விட்டது!” என்று ஹொரேஷியோ கூறினான்.

தந்தையின் ஆவியுருவத்தைக் கண்டதும் ஹாம்லெத் வியப்பும் அச்சமும் கொண்டான். அதன் தோற்றமும் நன்மை பயக்குமோ தீமை விளைக்குமோ என்று அறியாதபடியால் அவன் மனம் நடுங்கினான்; தன்னைக் காப்பாற்ற வேண்டுமென்று கடவுளை நோக்கித் தொழுது கலங்கினான்; வரவர அவன் அச்சம் அகன்றது. தன் தந்தையின் உருவம் தன்னை இரக்கத்தோடு பார்ப்பதாகவும், தன்னோடு பேச விரும்புவதாகவும் அவனுக்குத் தோன்றியது; ஆதலால், அவன் வாய் திறந்து, “ஹாம்லெத் அரசே! அருமைத் தந்தையே" என்று அழைத்தான்; “உமது உடலைப் புதைத்த இடுகாட்டிலிருந்து நீர் எழுந்து வந்தது ஏனோ? உம்முடைய ஆவியின் அமைதிக்காக யாங்கள் செய்ய வேண்டுவது ஏதேனும் உளதோ? அதைத் தெரிவித்தல் வேண்டும்,” என்று கேட்டான்.

ஆவியோ, அதைக் கேட்டதும், தனியாக இருந்து பேசும் பொருட்டுத் தன்னுடன் வருமாறு ஹாம்லெத்துக்குக் குறிப்பால் அறிவித்தது. குறிப்பை உணர்ந்தவர் காவலர் இருவரும், அந்த உருவத்தைப் பின்பற்றிச் செல்லுவதால் ஹாம்லெத்துக்குத் தீங்கு நேரினும் நேரும் என்று அஞ்சினர் ; நயமாக அழைத்துச் சென்று கடலில் விழச் செய்தும் உயர்ந்த மலையுச்சி ஏறச் செய்தும் கொன்றாலும் கொல்லும் என்று கலங்கினர்; ஆகையால் பின் தாடராதவாறு ஹாம்லெத்தைத் தடுத்தனர். ஹாம்லெத் அவர்கள் தடையைப் பொருட்படுத்தவில்லை. அவன் உறுதி தளரவில்லை. உயிர் போகுமோ என்ற அச்சமே அவன் நெஞ்சில்

ல்லை “உயிருக்கு அழிவு என்பதே இல்லையன்றோ?" என்று