உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

97

தந்தை இன்ன காரணத்தால் இறந்தான் என்று உண்மையை அறியக் கூடாமையாலும் ஹாம்லெத் மிக்க கவலைகொண்டான். பாம்பு தீண்டியதால் மன்னன் இறந்தான் என்று கிளாடியஸ் குடிகளுக்கு அறிவித்தான். ஆனால் கிளாடியஸ் தான் அந்தப் பாம்பு என்றும், அரசுரிமை பெறும் ஆசையால் அக்கொடிய பாம்பு தன் தந்தையைக் கடித்துவிட்டு அரசு கட்டில் ஏறி ஆண்டு வருகிறது என்றும் ஹாம்லெத் ஐயுற்றான்.

இந்த ஐயப்பாட்டில் உண்மை எவ்வளவோ, தன் தாய் இக் கொலைக்கு உடன் பட்டிருந்தாளோ, அவள் அறியாமலே கொலை நடைபெற்றதோ என்று பலவாறு ஹாம்லெத் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிக் கலங்கினான்.

5

இவ்வாறு இருக்கும்போது ஹாம்லெத் ஒரு செய்தி கேள்வியுற்றான். அரண்மனை வாயிலின் எதிரே உள்ள மேடையில் நள்ளிரவில் இரண்டு மூன்று நாளாக இறந்த மன்னன் சாயலான உருவம் ஒன்று தோன்றியதாகவும், அதை அரண்மனைக் காவலர் கண்டதாகவும் அவன் அறிந்தான். அரசன் அணியும் கவசத்தையே அஃது அணிந்திருந்ததாகவும் கூறப்பட்டது. அந்த உருவத்தைக் கண்டவர்களுள் ஹொரேஷியோ என்பவன் ஒருவன். அவன் ஹாம்லெத்துக்கு உயிர்த் தோழன். அவ்வுருவத்தைக் கண்ட காலமும் கோலமும் பற்றி அவர்கள் ஒரு வகையாகவே கூறினார். அஃதாவது, சரியாகப் பன்னிரண்டு மணிக்குத்தான் அது தோன்றியது; அதன் முகத்தில் வாட்டம் காணப்பட்டது; கோபம் இல்லை, துயரமே காணப்பட்டது; தாடி இளநரை நரைத்திருந்தது. காவலர் பேசியபோதும் அது மறுமொழி கூறவில்லை; ஒரு முறை அது தலைநிமிர்ந்து பேசத் தொடங்கினாற் போலக் காணப்பட்டது; ஆனால் அதற்குள் கோழி கூவிற்று; அதைக் கேட்டதும் உருவம் விரைந்து மறைந்தது; அடுத்த இமைப்பொழுதில் அது கண்ணிற்குப் புலப்படவே இல்லை.

காவலாளர் கூற்றுக்கள் ஹாம்லெத்துக்குப் பொய்யாகத் தோன்றவில்லை. அவன் வியந்தான். அது தன் தந்தையின் உருவமே என்று எண்ணி அதைக் காணத் துணிந்தான். ‘அது காரணம் இல்லாமல் தோன்றவில்லை; ஏதோ சொல்வதற்காகவே தோன்றியது; என்னைக் கண்டால் அது பேசக்கூடும்,” என்று