உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

105

ஆவியின் மொழிகள் உண்மையே, பொய் அல்ல என்பதில் ஹாம்லெத்துக்குப் போதிய நம்பிக்கை பிறந்தது. ஐயுற்றுப் பெரிதும் வருந்திக் கொண்டிருந்த ஒருவனுக்குத் திடீரெனத் தெளிவு பிறந்து மனம் தேறினால் பெருமகிழ்ச்சி உண்டாகும் அன்றோ? அத்தகைய மகிழ்ச்சியை அடைந்தவனாய், ஹாம்லெத் ஹொரேஷியோவைப் பார்த்து, “ஆவி சொன்ன சொல் ஆயிரம் பொன் பெறும்” என்று கூறினான். பழிக்குப் பழி வாங்கும் உறுதியோடும் இனிச் செய்யத் தக்கது யாது என்று அவன் எண்ணத் தொடங்கினான் அதற்குள், அரசி ஹாம்லெத்துக்கு அழைப்பு அனுப்பி அவனோடு தனிமையில் பேச விரும்புவதாகத் தெரிவித்தாள்.

அரசன்

இவ்வாறு அழைப்பு அனுப்பியது விருப்பத்தாலேயே ஆகும். ஹாம்லெத்தின் ஒழுக்கக்கேட்டினால் தனக்கும் அரசிக்கும் மிக்க வருத்தம் விளைந்திருப்பதாக அறிவிக்குமாறு அவன் அரசியிடம் கூறியிருந்தான். தாய்க்கும் மகனுக்கும் நடக்கும் பேச்சு முழுதும் விடாமல் அறிய விரும்பி அவன் ஓர் ஏற்பாடு செய்திருந்தான். பெற்ற தாய் தன் மகன் சொன்னவற்றில் சிலவற்றை மறைத்துவிடுவாள் என்று அவன் ஐயங்கொண்டு அரசியும் ஹாம்லெத்தும் தனிமையில் பேசும் இடத்திற்கு அருகே திரைமறைவில் பொலோனியஸை இருக்கச் செய்தான். ஆண்டு முதிர்ந்த அமைச்சனாகிய பொலோனியஸ் அங்கிருந்தபடியே எல்லாப் பேச்சும் கேட்டல் கூடும். இப்படிப்பட்ட தந்திரங்களிலும் அரசியற் சூழ்ச்சிகளிலும் அனுபவம் மிகுந்த பொலோனியஸுக்கு து முற்றிலும் பொருத்தமான வேலையே. இவ்வாறு செய்திகளை மறைந்திருந்து அறிவது அவனுக்கு மகிழ்ச்சியே.

4. நாடு கடந்து மீளுதல்

தாயின் விருப்பப்படியே ஹாம்லெத் சென்றான். “மகனே! உன் நடையும் செயலும் இவ்வாறு தகாத முறையில் மாறக் காரணம் என்னை? உன் தந்தையாகிய அரசருக்கு நீ பெருந்தீங்கு இழைத்தவன் ஆகிறாய்," என்று அரசி கூறினாள். (தான் கிளாடியஸை மணந்த காரணத்தால் அவனை ஹாம்லெத்துக்குத் தந்தை எனக் குறிப்பிட்டாள்.)