உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

அப்பாத்துரையம் - 37

அதைக்காண அரசனையும் அரசியையும் அழைத்திருந்தான்.

அந்த நாடகத்தின் கதை கதை இதுதான்: வியன்னா12 நகரத்திலிருந்த கண்சாகோ3 என்பவன் பெரிய குறுநில மன்னன். அவனுடைய செல்வத்தைக் கவர விரும்பினான், அவனுடைய உறவினனான லூஷியானஸ்" என்பவன். அவன் பூங்காவில் உறங்கிக்கிடந்த போது, லூஷியானஸ் நஞ்சிட்டுக் கொன்றான். சில நாட்களுக்குள் அவனுடைய மனைவியான பப்டிஸ்டா'5 என்பவளைத்தான் மணந்தான்.

தன்னை அகப்படுத்த ஹாம்லெத் செய்த சூழ்ச்சி அறியாத அரசன் அரசியுடனும் அமைச்சர் முதலானோருடனும் இந்நாடகம் காணச் சென்றான். அவனுடைய முகக்குறிப்பை அறியுமாறு ஹாம்லெத் அருகே உட்கார்ந்திருந்தான்.

நாடகம் தொடங்கியது. முதலில் கன்சாகோவுக்கும் அவன் மனைவிக்கும் பேச்சு நிகழ்ந்தது. அதில் அவன் மனைவி பப்டிஸ்டா பின்வருமாறு கூறினாள். “என் உள்ளத்தில் உள்ளது உண்மையான காதலேயாகும். என் இன்னுயிர்த் துணைவராகிய நீர் இறந்த பின்பும் யான் உயிர்வாழ நேர்ந்தால், எக்காரணத்தாலும் யான் மறுமணம் புரியேன். இஃது உறுதி அப்படி மறுமணம் செய்து கொள்வேனானால் என்னிலும் கொடியவள் இல்லை. ஏன்? கொண்ட கொழுநரைக் கொன்று வாழும் கொடிய பெண்டிரே மறுமணம் செய்துகொள்ள வல்லவர்,” என்று கூறினாள். நாடகத்தில் இப்பகுதி நிகழும் போது அரசன் முகக் குறிப்பைக் கூர்ந்து கவனித்தான் ஹாம்லெத். அம்மொழிகள் அரசனுக்கும் அரசிக்கும் அம்பாய்த் தைத்தன. பிறகு நாடகத்தில் லூஷியானஸ் பூங்காவுக்குச் சென்று நஞ்சிட்டுக் கொல்லும் பகுதி நிகழ்ந்தது. தன் தமையனைத் தான் நஞ்சிட்டுக் கொன்றமைக்கு இது முற்றிலும் ஒத்திருந்தமையால் அரசன் நெஞ்சே அவனைச் சுட்டது. அங்கிருந்து கொண்டு மேலும் நாடகம் பார்க்க இயலாமல் அவ்வளவு கடுமையாக அவன் மனச்சான்று அவனை வருத்தியது. உடனே அரசன் விளக்குக் கொண்டுவருமாறு ஏவித் திடீரென ஏதோ நோயுற்றாற் போல நடித்து, அவ்விடம் விட்டு அகன்றான். அரசன் அகலவே நாடகம் நின்றது.

னஏ