உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ||-

அப்பாத்துரையம் - 37

கலத்தில் பாய்ந்தான். உடனே, ஹாம்லெத்துடன் வந்தவர்கள் நடுநடுங்கி அவனைக் கைவிட்டு, ஆண்மையின்றிக் கப்பலைத் திருப்பி இங்கிலாந்திற்கு விரைந்து செலுத்தினார்கள். தம் அழிவிற்கே காரணமாக மாற்றி எழுதப்பட்ட கடிதத்தை எடுத்துக்கொண்டு காவலரும் சென்றனர்.

அரசிளங்குமரனாகிய ஹாம்லெத் கள்வர் கையில் அகப்பட்டுக் கொண்டான். ஆயினும் அக்கள்வர் அவனிடம் அன்பு காட்டினர்; தம்மிடம் அகப்பட்டவன் இன்னான் என அறிந்து கொண்டனர்; தாம் இப்போது ஏதேனும் உதவி செய்தால் அதற்குத்தக்க கைம்மாறு இளங்கோவாகிய ஹாம்லெத் செய்வான் என்று நம்பினர்; டென்மார்க்குக் கரையில் உள்ள ஒரு துறைமுகத்தில் அவனை இறக்கிவிட்டனர்.

அவ்விடத்திலிருந்து ஹாம்லெத் அரசனுக்கு ஒரு திருமுகம் எழுதினான்; அதில், தான் தப்பிப்பிழைத்துத் தாய்நாடு சேர்ந்ததைத் தெரிவித்து, மறுநாள் அரசன் முன்னிலையில் வருவதாக அறிவித்திருந்தான். திருமுகத்தில் எழுதியவாறு அரண்மனைக்குத் திரும்பிய போது அவன் கண்ட முதற்காட்சி அவனுக்குப் பெருந்துயர் தந்தது.

5. வாட்போரில் மடிதல்

அவன் கண்டது என்னை? அவன் ஆருயிர்க் காதலி ஒபீலியாவின் உடலை இடுகாட்டிற் புதைத்த சடங்கே ஆகும். தந்தை இறந்த நாள் முதல் அந்தக் கன்னியின் அறிவு கலங்கியது. தன் தந்தைக்கு நேர்ந்த எதிர்பாராத முடிவு, தான் காதலித்த அரசிளங்குமரனே தன்னைக் கைவிட்ட கொடுமை ஆகிய இவற்றை அவள் எண்ணி எண்ணி வருந்தினாள். விரைவில் அவள் மனம்மாறிப் பித்துப் பிடித்தவள் போல அலைந்தாள்; அரண்மனையில் இருந்த மகளிர்க்கு மலர் பறித்துக் கொடுத்து, அம்மலர் தன் தந்தையின் இறுதிச் சடங்கிற்கான அறிகுறி என்பாள்; காதலைக் குறித்தும் சாதலைக் குறித்தும் பாடல் பல பாடுவாள்; பொருளற்ற வெறும் பாடல்களையும் பாடுவாள்; தன் குடும்ப நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் முற்றும் மறந்தவள் போலத் திரிவாள். ஆற்றங்கரையில் அலரிச் செடி ஒன்று சாய்ந்து வளர்ந்திருந்தது. அதன் இலைகளின் நிழல் ஆற்றுநீரில்