உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

111

தெரிந்தது. ஒருநாள் யாரும் இல்லாதபோது, அழகிய மாலை ஒன்று தொடுத்துக் கையில் ஏந்திக்கொண்டு அந்த இடத்திற்குச் சென்றாள் ஒபீலியா; தன் கையில் இருந்த மலர்மாலையை அலரிச் செடியின் ஒரு கிளையின் முனையில் தூக்கக்கருதி அச்செடியில் ஏறினாள். ஏறி நின்றிருந்த கிளை ஒடிந்தது. ஒபீலியா ஆற்றுநீரில் விழுந்தாள்; அவள் உடை உடனே நீரில் நனையாமையால் சிறிது நேரம் நீர்மேல் மிதந்தாள்; தான் உற்ற பேரிடர் அறியாதவளாய், நீர் வாழ்வனபோல இருந்து, அப்பொழுதும் சில பாட்டுக்களைப் பாடினாள். உடை சிறிது சிறிதாக நனைந்துகொண்டே வந்தது; முழுதும் நனைந்து நங்கையை நீரினுள் இழுத்துச் சென்றது; அவளும் பாடலை மறந்தாள்; சேற்றில் மறைந்தாள். சகோதரன் லேயர்ட்டிஸ்16 அவளுடைய இறுதிச் சடங்கை நடத்த, அரசனும் அரசியும் அரசவையோரும் கூடியிருந்த வேளையிலேதான் ஹாம்லெத் அங்குச் சென்றான்.

அங்கு நடப்பது யாதென்று

ஹாம்லெத்துக்கு

விளங்கவில்லை. அவன் ஒருபுறமாக ஒதுங்கி நின்றான். நடக்கும் சடங்கில் குறுக்கிட அவன் விரும்பவில்லை. கன்னிப் பெண்களாயிருந்து இறப்பவர்கள் உடல்மீது மலர் தூவுதல் வழக்கம். அவ்வழக்கப்படி மலர்தூவப்படுதலைக் கண்டான் ஹாம்லெத். அவ்வாறு மலர் தூவினவள் அரசியே. அரசி மலர் தூவியபோது, “இனிமைக்கோர் இனிமையே! எழிலுக்கோர் எழிலே! உன் மணவறைக்கு அணிசெய்ய எண்ணியிருந்தேனே! உன் பிணக்குழியில் மலர் தூவுமாறு முடிந்து விட்டதே! எனதுள்ளம் ஒன்றாயிருக்கத் திருவுளம் மற்றொன்றானதே! நீ என் மகன் ஹாம்லெத்தின் மனைவியாக இருந்திருக்க வேண்டுமே!” என்று கூறி வருந்தினாள். ஒபீலியாவின் சகோதரனோ, "இக்குழியினின்று அழகிய நீலமலர் தோன்றுக," என்று கூறிவிட்டு, உடனே குழியினுள் குதித்து, நின்றிருந்தவர்களை நோக்கி,"என் சகோதரியுடன் யானும் புதைக்கப்படுவேனாக! என் மீது மலைபோல மண் குவியுங்கள்,” என்றான்.

ஹாம்லெத் அக் கட்டழகியின் மீது தான் கொண்டிருந்த காதலை நினைத்துக் கொண்டான்; “உடன் பிறந்த ஒருவன் இவ்வளவு வருந்துகிறானே! இவனைப் போல உடன் பிறந்தோர்