உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(112) || _ _.

அப்பாத்துரையம் – 37

நாற்பதினாயிரவர் செலுத்தும் அன்பும், நான் கொண்ட அன்பிற்கு ஈடாமோ?" என எண்ணினான். அவன் அகத்தே கொண்ட எண்ணம் புறத்தே வெளிப்பட்டது. லேயர்ட்டிஸ் கொண்ட பித்தனும் பெரும் பித்துக்கொண்டு குழியினுள் குதித்தான் ஹாம்லெத். அங்கிருந்து லேயர்ட்டிஸ் அவனை இன்னான் என அறிந்து, தன் தந்தையும் சகோதரியும் ஆகிய இருவர் சாதலுக்குக் காரணம் அவனே என நினைந்து, கழுத்திறுகப் பற்றினான். அங்கிருந்தவர்கள் விலக்குமளவும் அவன் விட்டான் அல்லன். சடங்கு முடிந்தபின், லேயர்ட்டிஸை எதிர்ப்பவன் போலக் குழியினுள் பாய்ந்தது தவறுதான் என ஹாம்லெத் ஒப்புக்கொண்ான்; அழகிய ஒபீலியா இறந்ததற்காகத் தன்னிலும் மிகுதியாக ஒருவன் வருந்துவதைத் தான் பார்த்துப் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை என அவன் அறிவித்தான். அப்போது இளங்குமரர் இருவரும் பகை தணிந்தவர் போலக் காணப்பட்டனர்.

லேயர்ட்டிஸ் தன் தந்தையும் சகோதரியும் மாண்டதுபற்றி வருத்தமும் சினமும் கொண்டுள்ளான் அல்லனோ? அவ்வருத்தமும் சினமும் ஹாம்லெத்தை அழிப்பதற்குப் பயன்படுமாறு அரசன் சூழ்ச்சி செய்யலானான். அவன் லேயர்ட்டிஸை அழைத்து, “நீ ஹாம்லெத்துடன் நட்புப் பாராட்டி வாட் போரில் பெற்றுள்ள திறமையைக் காட்டுமாறு அவனை அழைப்பாயாக," என்று ஏவினான். ஹாம்லெத் அதற்கு உடன்பட்டான். ஒருநாள் குறிக்கப் பட்டது. அன்று அரசவையோர் அனைவரும் அதனைக் காண வந்தனர். அரசன் சூழ்ச்சியின்படி லேயர்ட்டிஸ் ஒரு வாளுக்கு நஞ்சூட்டிவைத்திருந்தான்.

ஹாம்லெத், லேயர்ட்டிஸ் இருவரும் வாட்போரில் பெயர் பெற்றவர். அதனால் அரசவையோர் பலவாறு ஓட்டம் வைத்துக் களிப்புடன் காத்திருந்தனர்.

லேயர்ட்டிஸின் செயலைப்பற்றி ஹாம்லெத் ஒன்றும் ஐயுற வில்லை. அவன் கைக்கொண்ட படையை ஆராயவுமில்லை. கூர் மழுங்கிய வாள் ஒன்றைக் கையில் ஏந்தினான். சிலம்பப்போர் முறைக்கு மாறாக லேயர்ட்டிஸ் கூரிய வாளைக் கையில் ஏந்தி நின்றான்; அரசன் சூழ்ச்சியின்படி நஞ்சூட்டப்பெற்ற வாளே அது. போர் தொடங்கியது. தொடக்கத்தில் லேயர்ட்டிஸ் விளையாட்