உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

113

டாய்க் காலம் போக்கி, ஹாம்லெத் வெல்லுமாறு இடங்கொடுத்து வந்தான். அதனைக் கண்ட அரசன் தன் உள்ளத்தில் உள்ள கொடிய எண்ணத்தை மறைத்து, ஹாம்லெத்தின் திறமையை மிகவியந்து பாராட்டிப் புகழ்ந்தான்; அவனே வெற்றி பெறுதல் வேண்டுமென வாழ்த்தினான்; மேன்மேலும் உயர்ந்த ஓட்டம் வைத்தான். இவ்வாறு சிலமுறை வாளா இருந்த லேயர்ட்டிஸ் சினம் மூண்டு நஞ்சூட்டிய வாளை ஒச்சி ஹாம்லெத்தைக் குத்தினான். அது சாவைத் தரவல்ல குத்தே ஆகும். ஹாம்லெத் உடனே சினம் மூண்டு எழுந்தான்; அரசனது சூழ்ச்சியை அறியாது பாருதான்; போரின் இடையே லேயர்ட்டிஸ் வைத்திருந்த வாள் ஹாம்லெத் கையில் அகப்பட, கூர்மழுங்கிய வாள் அவன் கைப்பட்டது.நஞ்சூட்டிய அவ்வாளால் ஹாம்லெத் அவனைக் குத்தினான்; லேயர்ட்டிஸ் தான் விரித்த வலையில் தானே அகப்பட்டுக் கொண்டான்.

அதே நேரத்தில், “நஞ்சுகுடித்து விட்டேனே அந்தோ!' என்று அரசி கூக்குரலிட்டாள்.

வாட்போரில் களைத்து நீர் வேட்கை மேலிட்டு ஹாம்லெத் கேட்பானானால், அவனுக்குத் தரும் பொருட்டு அரசன் ஒரு கிண்ணத்தில் பழச்சாறு வைத்திருந்தான்! ஒருகால் லேயர்ட்டிஸ் தோற்று ஹாம்லெத் வெல்வானானால், எப்படியும் அவனைக் கொன்றுவிடல் வேண்டும் என்ற கருத்துடன் அரசன் அதில் நஞ்சு கலந்திருந்தான்; அந்தக் கிண்ணத்தைப் பற்றி அரசிக்கு அவன் எச்சரிக்கை செய்ய மறந்து விட்டான். அதனை அரசி எடுத்துக் குடித்து இறந்தாள்; இறக்கும்போதுதான் மேற்கூறியவாறு கூக்குரலிட்டாள்.

ஏதோ வஞ்சகம் நடந்திருப்பதாக அப்போது ஹாம்லெத் ஐயுற்றான்! உடனே கதவுகளை மூடுமாறு கட்டளையிட்டு ஆராயத் தொடங்கினான். லேயர்ட்டிஸ் அப்போது அவனைப் பார்த்து, “ஒன்றும் ஆராய்தல் வேண்டா. நானே வஞ்சகன். நீ குத்திய குத்து என் உயிரைப் போக்குகிறது. நான் கைக்கொண்டது கூரிய வாள்; அதன் முனைக்கு நஞ்சூட்டினேன். அதற்கு நானே இரையானேன். அதன் முனை உன் உடம்பிலும் பாய்ந்துள்ளது. நீயும் இனிப் பிழைத் திருத்தலும் அரிதே. என்னை மன்னிப்