உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

அப்பாத்துரையம் – 37

பாயாக. இவ்வளவு துன்பத்திற்கும் காரணமான சூழ்ச்சி செய்தவன் அரசனே," என்று கூறி உயிர் நீத்தான்.

தனக்கும் முடிவு நெருங்கிவிட்டதை ஹாம்லெத் உணர்ந்தான்; அந்த வாளின் முனையில் இன்னும் சிறிதளவு நஞ்சு இருத்தலை அறிந்தான்; உடனே தன் சிற்றப்பனாகிய வஞ்சகன்மீது பாய்ந்து அவன் மார்பில் குத்தினான்; இவ்வாறு தன் தந்தையின் ஆவியுருவத்திற்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றினான்; பழிக்குப்பழி வாங்கினான்; கொலைஞனைக் கொன்றான்.

66

தன் மூச்சு அடங்கிக்கொண்டு வருதலை உணர்ந்தான் ஹாம்லெத்; அருமை நண்பன் ஹொரேஷியாவை நோக்கினான்; அவனும் தற்கொலை செய்துகொள்ள முயலும் குறிப்பை அறிந்து, 'அருமை நண்பா! உலகிற்கு என் வரலாற்றைத் தெரிவித்தல் வேண்டும்;அதன் பொருட்டுவாழ்ந்திரு இதுவே என் வேண்டுகோள்" என்றான். ஹொரேஷியாவும் அவ்வாறு வாழ்ந்திருந்து உலகிற்கு உண்மையை அறிவிப்பதாக வாக்களித்தான். உடனே மனநிறை வோடு ஹாம்லெத் உயிர்விட்டான். ஹொரேஷியாவும் மற்றவர்களும் கண்ணீர் விட்டுக் கசிந்து இளங்கோவின் இன்னுயிர் அமைதிபெற அருளுமாறு தெய்வங்களை வேண்டினார்கள். ஹாம்லெத் அரிய பண்புகள் வாய்ந்த அரசிளங்குமரன்; அன்பும் அருளும் நிறைந்தவன்; எல்லோராலும் போற்றப் பட்டவன்.அவன் உயிர் பெற்று வாழ்ந்திருந்தால் டென்மார்க் நாட்டிற்குத் தனிப்பெரு மன்னனாய்த் தழைத்தோங்கியிருப்பான்.

அடிக்குறிப்புகள்

1. Denmark

3. Gertrude

5. Horatio 7. Polonius

9. Troy 11. Hecuba

13. Conzago

15. Baptista

2. Hamlet

4. Claudius

6. Marcellus

8.

Ophelia

10. Praim

12. Vienna

14.

Lucianus

16. Laertes