உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(144) ||-

அப்பாத்துரையம் - 37

பார்த்துக் கொடுத்துவிட்டுத் திரும்பினான். திரும்புகையில் அவன் அரசியிடமிருந்து தான் பெற்ற ஒரு மருந்துப் புட்டியை அவளிடம் கொடுத்தான். இதனை, 'எல்லாப்பிணிகளுக்கும் மருந்தாய் உதவும் சஞ்சீவி' என அவள் அவனிடம் கூறியிருந்தாள். 'வழியில் உடல் நலத்திற்கு ஏதேனும் ஊறு நேரின், அதனைப் பயன்படுத்திக் கொள்க' என்றான். பிஸானியோ, உண்மையில் இம்மருந்து சஞ்சீவியன்று. நீ நினைவே குடிகொண்ட அரசி சஞ்சீவி என்ற பெயரால் நஞ்சையே கொடுக்கத் துணிந்தாள். ஆனால், அவள் குணத்தை அறிந்து, அவள் எலி முதலிய உயிர்களை உடனே கொல்லும் நஞ்சு கேட்கும்போது, மருத்துவன் நஞ்சைக் கொடுக்காமல் மயக்க மருந்தொன்றையே கொடுத்து வைத்தான். எனவே இமொஜென் கையிற் கிட்டிய அம்மருந்து, பிஸானியோ நினைத்தது போலச் சஞ்சீவியன்றாயினும் அரசி நினைத்ததுபோல நஞ்சுமன்று.

6. இயற்கையின் ஆற்றல்

றைவனது திருவருளின் போக்குச் சிலசமயம் புதுமையானதாக அமைவதுண்டு. இமொஜெனுக்கும் இங்ஙனமே நிகழ்ந்தது. ஏனெனின், அவள் தற்செயலாகத் தன் உடன்பிறந்தார் இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தாள். வர்களை ஸிம்பலினின் அரண்மனையினின்று மறைவாக எடுத்துக்கொண்டவன் 'பெலாரியஸ் ஆவன். இவன் ஸிம்பலினின் பெருங்குடி மக்களுள் ஒருவன், இவன் மீது அரசன் பொய்யாக வீண் பழி சுமத்தி நாட்டை விட்டுத் துரத்தினான். அதனால் வெகுண்டு பழிக்குப் பழியாகவே இப்பிள்ளைகளைத் தூக்கிச் சென்றான். முதலில் அவன் நோக்கம் இதுவாயினும், அவர்களைத் தன் பிள்ளைகளென வளர்த்து, அவர்களிடம் பற்றுதலுடையவன் ஆவான்.

இமொஜென் மில்போர்டு ஹேவனுக்குச் சென்று ரோமுக்குக் கப்பலேற வேண்டுமென்று தான் விரைந்து நடந்தாள். ஆனால் எப்படியோ வழிதவறிக் காட்டில் வந்து மேற்கூறிய உடன்பிறந்தார் வாழ்ந்த குகைக்கு வந்து சேர்ந்தாள். வழியில் அவள் பட்ட துயர் கொஞ்ச நஞ்சமன்று. ஆணுடை அணிந்ததனால் ஆண்தன்மை வந்துவிடாதன்றோ? அவளது பஞ்சினும் மெல்லிய சீறடிகள் கல்லும் முள்ளும் உறுத்தக்