உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

155

3. பெர்திதா: அரசனால் அந்திகோனஸ் மூலம் கடல் கடந்து விடப்பட்ட பெண் மகவு - இடையர் வளர்த்துப் பிளாரிஸெல் காதலியானவள்.

கதைச்சுருக்கம்

ஸிஸிலி அரசன் லியோன்டிஸ் தன் நண்பனாகிய பொஹிமியா அரசன் பாலிக்ஸெனிஸைப் பலநாள் விருந்திற்கப்பால் தான் வற்புறுத்திய போது தங்காமல் மனைவி வற்புறுத்தித் தங்கினதால் பொறாமை கொண்டு அவனைக் கொல்ல நண்பனாகிய காமில்லோப் பெருமகனை ஏவ, அவன் பாலிக்ஸெனிஸிடம் எல்லாம் சொல்லி உடன் சென்றுவிட்டான். ஹெர்மியோனையும் சிறையிலிட்டுத் துன்புறுத்த அது பொறாத அவள் சிறுவன் மாமில்லஸ் இறந்தான். பின் பிறந்த பெண்மகவையும் அந்திகோனஸ் பெருமகன் மூலம் கடல் கடந்து விட்டுவிடத் தூண்டினான். அங்ஙனம் விட்டு மீள்கையில் அவனைக் கரடி விழுங்கிற்று. ஹெர்மியோனிடம், அரசன் இறங்குமுன், அவள் இறந்தாள் என்று கூறி அந்திகோனஸ் மனைவியாகிய பாலினா அவளைக் காத்தாள்.

விடப்பட்ட மகவு இடையரால் எடுக்கப்பட்டு பெர்திதா என்ற பெயருடன் வளர்ந்தது. இடையனுருவில் வந்த பாலிக்ஸெனிஸ் மகன் பிளாரிஸெல் அவளைக் காதலித்து அரசன் அறிந்து சீறியும் பொருட்படுத்தாதிருப்ப, 'காமில்லோ இரங்கி லியோன்டிஸ் மூலம் அவர்களைச் சேரவைக்க நினைக்க, லியோன்டிஸ் பெர்திதாவைக் கண்டவுடன் அவள் தன் மனைவி போன்றிருப்பது கண்டு இடையனை உசாவ உண்மை விளங்கிற்று. பின் பாலினாவும் உருவம் காட்டுவதாகக் கூறி ஹேர்மியோனைக் காட்ட இதற்கிடையில் பாலிக்ஸெனிஸும் வர, அனைவரும் ஒருங்கு சேர வளர்ந்தனர். பிளாரிஸெல் பெர்திதாவை மணந்தான்.

1. நட்பின்பம்

2லியோன்டிஸ் என்பான் 'ஸிஸிலித் தீவின் அரசன். அவன் மனவிை அழகிலும் கற்பிலும் மிக்கஹெர்மியோன் ஆவள். அவளது இவ்வாழ்க்கை பொன்மலரும் நறுமணமும் பொருந்தியதென்னும்படி குறைவிலா நிறைவு பெற்றிருந்தது.