உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

5பொஹீமியா

அப்பாத்துரையம் – 37

நாட்டரசனான பாலிக்ஸெனிஸ்

லியோன்டிஸினுடைய பழைய பள்ளித்தோழனும் உற்ற நண்பனுமாவான். தனது மணவினையின் பின் லியோன்டிஸ் பாலிக்ஸெனிஸைக் கண்டதே கிடையாது. கடித மூலமாக ஒருவரை ஒருவர் நலம் உசாவுவது மட்டும் உண்டு.

லியோன்டிஸ் அவனை நேரில் கண்டு உறவாடுவதுடன் தன் அரிய மனையாளுக்கு அவனை அறிமுகம் செய்து வைக்கவும் வேண்டும். என்று நெடுநாள் எண்ணிக் காண்டிருந்தான். பல தடவை அழைப்பு அனுப்பிய பின், இறுதியில் ஒருநாள் பாலிக்ஸெனிஸ் அவற்றிற்கிணங்கி லியோன்டிஸைப் பார்க்க வந்தான்.

முதலில் லியோன்டிஸுக்கு நண்பனது வரவால் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. தனது இன்ப வாழ்விற்கிருந்த ஒரே குறை இப்பொழுது நீங்கிற்றென அவன் உணர்ந்தான். பழைய பள்ளித்தோழனது வரவினால் பழைய பள்ளி, நினைவுகளும் பள்ளியுணர்வுகளும் ஏற்பட்டது மட்டுமன்றித் தானும் பழையபடி பள்ளிச் சிறுவன் ஆனதாகவே அவன் உணர்ந்தான். நண்பரிருவரும் பேசும் இப்பழங்காலப் பேச்சுக்களையும் அதனால் கணவன் கொண்ட களிப்பினையும் பார்த்து ஹெர்மியோனும் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.

சிலநாள்

லியோன்டிஸுடன்

தங்கியிருந்தபின் பாலிக்ஸெனிஸ் நண்பனிடமிருந்து விடைபெற்றுக் கொள்ள விரும்பினான். லியோன்டிஸ் தன் நண்பனை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவனை இன்னும் சில நாள் தங்கியிருக்கும்படி வற்புறுத்தினான்.

லியோன்டிஸ் எவ்வளவு சொல்லியும் பாலிக்ஸெனிஸ் தான் இனிப் போக வேண்டியதுதான் என்று சொல்லிவிட்டான். தனால் மனமுடைந்த லியோன்டிஸ் ஹெர்மியோனிடம் சென்று, “நீயாவது அவனை வற்புறுத்தி இருக்கச் செய்யலாமே” என்றான். அதன்படி அவள் பாலிக்ஸெனிஸிடம் சென்று பெண்களுக்கியற்கையான நயத்துடன் அவனை இன்னுஞ் சிலநாள் தங்கியிருந்து போகலாம் என்று வேண்டினாள். அவளுடைய இன்மொழிகளை மறுக்கக் கூடாமல்