உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

157

பாலிக்ஸெனிஸ் தன் முடிவைச் சற்றுத் தள்ளி வைக்க உடன்பட்டான்.

2. பொறாமைப் பேய்

தனது வேண்டுகோளை மறுத்த தன் அன்பன் தன் மனைவியின் வேண்டுகோளை ஏற்றான் என்ற செய்தி லியோன்டிஸ் மனத்தில் சுறுக்கென்று தைத்தது. அது நயமான மொழிகளாலும் இருவர் வேண்டுகோளின் ஒன்றுபட்ட ஆற்றலாலுமே ஏற்பட்டதென்று அவன் மனத்தில் அப்போது படவில்லை. அதற்குக் காரணம் கள்ளங் கபடற்றிருந்த அவன் உள்ளத்தில் பொறாமைப் பேய் புகுந்து கொண்டதேயாம்.

‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பர். அஃதேபோன்று மனத்தில் இக்களங்க நினைவு ஏற்பட்டது. முதல், அதற்குமுன் இயல்பாகத் தோன்றிய சிறுசிறு செய்திகளும் இப்பொழுது களங்கமுடையனவாகத் தோன்றின. கணவனுக்கு நண்பன் என்ற முறையில் ஹெர்மியோன் பாலிக்ஸெனிஸுக்குக் காட்டிய மதிப்பும் அன்பும் எல்லாம் லியோன்டிஸின் மனத்தில் களங்க நினைவுகளாக மாறின. அவனது பால்போல் தெளிந்த இனிய உள்ளம். இக்கடுப்பினால் திரைந்து தீமையும் கொடுமையும் நிறைந்ததாயிற்று.

7

இறுதியில் லியோன்டிஸ் தன் பெருமக்களுள் ஒருவனும் நண்பனுமான காமில்லோவிடம் தனது மனத்துள் எழுந்த எண்ணங்களை வெளியிட்டான். காமில்லோ உண்மையும் ஒழுக்கமும் அமையப் பெற்றவன். எனவே முதலில் அரசனது கருத்துத் தப்பானது என்று விளக்க முயன்றான். ஆனால் லியோன்டிஸ் அதனைச் செவியில் ஏற்றுக் கொள்ளவில்லை. அதோடு பாலிக் ஸெனிஸை நஞ்சிட்டுக் கொல்லுமாறும் அவன் காமில்லோவைத் தூண்டினான். காமில்லோ அதற்கு இணங்கு வதற்கு மாறாக, இம் மாற்ற முழுமையும் பாலிக்ஸெனிஸுக்கு அறிவித்து அவனுடன் அவன் நாடாகிய பொஹீமியாவுக்கே போய்விட்டான்.

தன் கருத்து ஈடேறாமற் போனது லியோன்டிஸின் சீற்றத்தை இன்னும் மிகைப்படுத்தியது. அவ்வெறியில் அவன் தன் மனைவியைச் சிறையிலிட்டான். அவர்களுக்கு அப்போது