உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் – 37

238) || கேட்டதும் அவள் ஒருவாறு தன்னை அடக்கிக்கொண்டு அவனிடம் முறையிட எண்ணினாள்.

நிழலின் அருமை வெயிலில் அன்றோ தெரியும்? அருள் நோக்குடையார் ஒழுங்கிற்கும், போலி நடுநிலையுடையார் கண்டிப்புக்கும் உள்ள வேற்றுமையை ஏஞ்செலோவின் ஆட்சியில் கண்டுகொண்ட நகர மக்கள், தம் பழந்தலைவன் வருவது கேட்டு இழந்த உறுப்புக்கள் உயிர் பெற்றெழுந்தன என ஆரவாரத்துடன் எழுந்து சென்று வரவேற்றனர். இன்முகத் துடனும், வணங்கிய கைகளுடனும் தலைவன் அனைவர் வணக்கத்தையும் ஏற்றுத் தெருவழியே வரலாயினான். அச்சமயம் இஸபெல் தலைவிரி கோலத்துடன் அவனெதிரே வந்து வழிமறித்து, ‘அருளுருக்கொண்ட எம் ஆருயிரே வருக. நீவிர் இல்லாதபோது இக்கொடியோன் (ஏஞ்செலோவைச் சுட்டிக் காட்டி) என் தம்பிக்கு உயிர் கொடுக்கும் பொய் உறுதி தந்து என் மானத்தைக் கைக்கொண்டு பின் அப்பழியோடு பழிசேர்த்து அவன் உயிரையும் வாங்கிவிட்டான். என் கண்மணியையும் இழந்தேன். பெண்களின் உண்மணியையும் இழந்தேன். இது முறையோ? என்று கதறி நின்றாள்.

ஏஞ்செலோ, 'தம்பியை இழந்த துயர் இப்புனைவையும் அருளியது போலும்!' என்று கூறி, வலிய முறுவலை வருவித்துக் கொண்டான்.

அப்போது மேரியானா முன்வந்து, "அரசே! இம்மாது கூறியவை முற்றிலும் உண்மையன்று; இவ்வுதவித் தலைவர் அவளுக்கு உண்மையில் எத்தகைய தீங்கும் செய்யவில்லை. அவர் செய்த தீங்கு எனக்கே. அவள் பெயரால் அங்கே சென்று அவர் காதலைப் பெற்றவள் நானே' என்றாள்.

இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் எதிராக வழக்காடவே தலைவன், ‘உங்களுக்குச் சான்று உண்டா?' என்றான். இருவரும் ஒருங்கே மடத்துத் துறவி ஒருவரே எங்களுக்குச் சான்று என்றனர். ‘சற்று நேரத்தில் அவரை அழைத்து வருக' என்று தலைவன் அவர்களிடம் கூறிவிட்டு, முதல் அமைச்சனாகிய எஸ்காலஸ் பெருமகனை அழைத்து, 'இப்போது ஏஞ்செலோ வழக்காளிகளுள் ஒருவனாய் விட்டபடியால் நான் வருமுன் அவர்கள் சான்று