சேக்சுபியர் கதைகள் - 2
239
கொண்டு வந்தால் நீயே வழக்காராய்ந்து தீர்ப்பளிப்பாயாக' என்று கூறிவிட்டு வெளியே சென்றான்.
இ
5. கற்பரசிகளின் வெற்றி
வெளியே சென்று அவன் மறுபடியும் மடத்துத் துறவி உருக்கொண்டு மேரியானாவுக்கும் இஸபெல்லுக்கும் சான்று கூறுவதாக அவர்களையும் உடன் கூட்டிக்கொண்டு வந்தான். தலைவனில்லாததையும் தன் நண்பனே உதவித் தலைவனாக இருப்பதையும் கண்டு துணிவுற்று ஏஞ்செலோ, 'ஐயா, ப்பெண்கள் இருவரும் சேர்ந்து, என் மீது பழி கட்டியிருக்கின்றனர். இத்துறவியும் அவர்களுக்கு உடந்தை யானவனே' என்று கூறினான். அது கேட்டுத் துறவி, 'நான் சான்று பகர வந்தேனேயன்றி உனக்கெதிராக வழக்காட வரவில்லை. ஆயினும், நீ என்னை இழுத்து விட்டபடியால் கூறுகிறேன். உன் தகுதி தெரியாமல் தலைவன் உன்னை ஆளவிட்ட வீறு. நீ தலைகால் தெரியாமல் நடக்கின்றாய். நீ செய்த கொடுமைகள் பலவும் நான் நேரில் கண்டறிந்தவனே' என்றான். இவனைப் பேசவிடுவது தவறு என்று கண்டு எஸ்காஸ், 'அடே துறவி, இவர் தலைவராயிருந்தவர், இன்னும் உயிர்நிலையி லுள்ளவர். இவருக்கெதிராகப் பேசமுன் உன்னைக் குற்றுயிராகக் குலைக்கும்படி உத்தரவிடுவேன்' என்றான்.
‘உதவித்தலைவன் ஒழுங்கு இதுதானா?' என்று கேட்டுக் கொண்டே தலைவன் தன் துறவி உடையை அகற்றித் தலைவனுடையில் வெளிப்பட்டான். எஸ்காலஸ் பெருமகன் முகம் சுண்டிற்று. ஏஞ்செலோ முகத்திலோ இருபத்தொரு நகரங்களும் தாண்டவமாடின. தலைவன்முன் தன் சிறுமையனைத்தும் வெளிப்பட்டு விட்டது எனக் கண்டு அவன் வேரற்ற மரம்போலத் தலைவன் முன் விழுந்து உயிருக்கு மன்றாடினான். தலைவனோ அவன் பக்கம் பாராமல், ‘உன்னை எக்குற்றத்திற்கும் மன்னிக்கலாகும்; கிளாடியோவின் உயிரைக் கொள்ளை கொண்டதற்கு மட்டும் மன்னிக்க முடியாது. அவனது முடிவை நீயும் அடைக' என்றான்.
அச்சமயம் மேரியானா ஓடிவந்து பணிந்து, ‘அண்ணலே, எனக்கு இவர் கணவர், காதலர். அவர் என்னைத் தள்ளினும் என்