240 ||
அப்பாத்துரையம் – 37
உள்ளத்தில் அவர் என்றும் தலைவரே. அவர் இறந்து வாழேன், என்னுயிரைக் கொண்டேனும் அவர் உயிரைக் காப்பாற்றி யருளுவீர்' என்றாள்.
தலைவன் அசையாதது கண்டு, அவள் இஸபெலை அணுகி, இஸபெல், இஸபெல், நீ பெரிய மனம் கொண்டவள் என்று எனக்குத் தெரியும். அவர் செய்த பிழை மன்னிக்க முடியாதது என்றும் நான் அறிவேன். அதற்காக நான் என்மீது எத்தகைய தண்டனையையும் ஏற்றுக்கொள்வேன். அவரை மட்டும் காப்பாற்ற வேண்டுமென்று தலைவரை என்னுடன் நீயும் வேண்டிக் கொள்வாயா?' என்று இரந்தாள்.
இஸபெல் தன் தம்பியைக் கொன்ற பாதகன் மீது தனக்குள்ள சீற்றத்தை ஒருவாறு அடக்கிக்கொண்டு, 'தலைவரே அவ்வாடவன் செய்த குற்றம் எதுவாயினும், இப்பெண் அவன்மீது கொண்ட காதல் அதனை அழித்துவிடும் தன்மையது. இவள் வேண்டுகோளை நிறைவேற்றி அருள்புரிவீர்’ என்றாள்.
தலைவன் எல்லையிலா மகிழ்ச்சி கொண்டு, 'மேரியானா கற்பரசி. அவளுக்கு அவள் கணவன் உயிரைக் கொடுக்கத் தடையில்லை. ஆனால் அவன் தன் போலித் துறவை ஒழித்து அவள் கணவனானால் மட்டுமே உயிர் பிழைப்பான்' என்றான். மேலும் அவன், ‘அவளைவிட இஸபெலும் கற்பிற் குறைபடுபவள் அல்லள். அதோடு தம்பியைக் கொன்றவனை மன்னித்த அவள் பெருமை அரிதே. அவளுக்கும் நான் பரிசு கொடுக்க எண்ணுகிறேன்' என்று கூறி ஒரு வேலையாளைக் குறிப்பாகப் பார்த்தான். உடனே அவன் சென்று கிளாடியோவைக் கூட்டிக்கொண்டு வந்தான்.
இறந்து போவோம் என்று வந்த கிளாடியோ, உயிரையும் பெற்றான். உயிரினும் பன்மடங்கு உயரிய தமக்கை அன்பையும் பெற்றான்; இஸபெலின் வியப்புக்கும், மகிழ்ச்சிக்கும் ஓர் எல்லை இல்லை.
தலைவன் ஸபெலை நோக்கி, 'இத்தனைப் பெருந் தகைமையையும் உறுதியான கற்பையும் உடைய நீ துறவறம் பூண்பது தகுதியன்று. உனது பெருமைக்கேற்ற கணவன் இவ்வுலகில் இருக்க முடியாது. ஆயினும் உனக்கு நான் செய்த