இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சேக்சுபியர் கதைகள் - 2
241
உதவியை எண்ணி என்மீது கடைக்கணிப்பதாயின், அஃது இந்நகரும் யானும் செய்த முன்னை நல்வினைப்பயன் என்றெண்ணுவேன்' என்றான்.
இஸபெல் தன்னை ஈன்ற தாயை நினைப்பவள் போல நிலமாதை உற்று நோக்கினாள்.
அதுமுதல் வீயன்னா நகரத்து இளைஞரை அந்நகரத்து மங்கையர் விழிகளே நல்வழிப்படுத்தின. இஸபெலின் முன்மாதிரியே, அவர்களுக்கு எச்சட்டத்திலும் மேலான சட்டமாய் அமைந்தது.
அடிக்குறிப்புகள்
2.Vincentio.
1. Vienna
3. Lord Escalus
5.Claudio
7.Convent of St. Clare
9. Lucio
11.Frederick
4. Anglo
6. Isabel
8. Juliet
10. Mariana