இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8. ரோமியோவும் ஜூலியட்டும்
(Romeo and Juliet)
கதை உறுப்பினர் ஆடவர்:
1. கப்பியூலத்துப் பெருமகன்: ஜூலியட்டின் தந்தை.
2. மாண்டேகுப் பெருமகன்: கப்பியூலத்தின் வரன்முறைப் பகைவன்-ரோமியோவின் தந்தை.
3. ரோமியோ: மாண்டேகுப் பெருமகன் புதல்வன்- ஜூலியட்டைக் காதலித்து மறைவாய் மணந்தவன்.
4.பென்வாலியோ: ரோமியோவின் நண்பர்கள்.
5. மெர்குதியோ:
6. டைபால்ட்: ஜூலியட்டின் அருமை மைத்துனன்- ரோமியோவை மல்லுக்கிழுத்து அவன் கையால் இறந்தவன்.
7. லாரன்ஸ்: துறவி-அருளுடையார்-ரோமியோ ஜுலியட் காதலால் இரு குடிகளின் பகை தீர்க்க எண்ணி மணம் புரிவித்தவர்.
8. கவுண்ட்பாரீஸ்: பெற்றோரால் ஜூலியட்டுக்குக் கணவனாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற மணமகன்.
பெண்டிர்:
1. ஜுலியட்: கப்பியூலத்துப் பெருமகன் புதல்வி, ரோமியோவின் காதலி.
2. ரோஸாலின்: ரோமியோவின் முதற் காதலி-அவனைப் புறக்கணித்தவள்.