சேக்சுபியர் கதைகள் - 2
கதைச்சுருக்கம்
243
மாண்டேகு, கப்பியூலத்து என வெரோணா நகரத்தில் இரு பெருஞ் செல்வக் குடிகள், அவர்கள் தம்முட் பெரும் பகைமை கொண்டிருந்தனர்.மாண்டேகுப் பெருமகனுடைய ஒரே புதல்வன் ரோமியோ. கப்பியூலத்துப் பெருமகனுடைய ஒரே புதல்வி ஜூலியட். கப்பியூலத்துப் பெருமகன் மாளிகையில் நடந்த ஒரு விருந்திற்குத் தான் விரும்பிய ரோஸாலின் என்ற மங்கையைக் காணப்பென்வாலியோ, மெர்குதியோ என்ற தன் இரு நண்பருடன் வந்த ரோமியோ ஜூலியட்டைக் கண்டு காதலித்தான். ரோமியோவுக்கு லாரன்ஸ் என்ற ஒரு துறவி நண்பனாயிருந்தான். அவன் பகைமை கொண்ட இரு குடிகளையும் இணைக்கும் ஆர்வத்துடன் ரோமியோ ஜூலியட் ஆகியவர்களின் காதலை ஆதரித்து மறைவில் மணஞ் செய்துவைத்தான்.
அவர்கள் காதல் செய்தியறியாது ஜூலியட்டின் மைத்துனன் டைபால்ட் ரோமியோவை மெர்குதியோவுடன் தெருவில் கண்ணுற்று மல்லுக்கிழுத்துப் போரிட்டு அவனால் கொலையுண்டான். இதனால் நகர்த்தலைவன் ரோமியோவை நாடு கடத்தவே, ஜூலியட்டிடமும் துறவியிடமும் விடைபெற்று அவளை அழைத்துக் கொள்வதாக உறுதி தந்து சென்றான். இதற்கிடையில்
மணச்
ஜூலியட்டின் காதல் செய்தியறியாத பெற்றோர் அவளைப் பாரிஸ் பெருமகனுடன் மணஞ் செய்ய ஏற்பாடு செய்தனர். இவ்விக்கட்டினின்றும் தப்ப லாரன்ஸ் ஒரு சூழ்ச்சி செய்தான். 42 மணி நேரம் இறந்தவர் போலாக்கும் மயக்க மருந்தொன்றை அவளுக்கு அவன் கொடுக்க, அவள் இறந்தவளென்று தன் குடும்பக் கல்லறையில் அவளை அடக்கம் செய்கின்றனர். துறவி இது செய்தியைத் தூதனால் அவனுக்குத் தெரிவித்து அவளைப் எழுப்பிப் போகும்படி ரோமியோவுக்கு எழுதினான். ஊழ்வலியால் தூதன் தாமதம் செய்துவிட்டான். நற்செய்தியிலும் கடுகச் சென்ற ஜூலியட் இறப்புச் செய்தி கேட்டு வந்த ரோமியோ அவளைக் கண்டு இறந்ததாகக் கொண்டு அங்கே வந்த பாரிஸ் பெருமகனுடன் போரிட்டு அவனைக் கொன்றபின் தானும் மாள, அதன்பின் எழுந்த ஜூலியட்டும் காதலுடன் மாண்டாள். இறுதியில் வந்த இரு குடிப் பெற்றோரும் நகரத்தலைவனும் துறவியால் செய்தி