சேக்சுபியர் கதைகள் - 2
251
அவளுக்கு விடையிறுக்க, அவளுடன் உரையாட அவன் உள்ளம் பாய்ந்தெழுந்தது. ஆனால், அவள் இன்னுரைகளைப் பின்னும் கேட்க வேண்டுமென்னும் ஆர்வம் அதனை அழுத்திப் பின்னுக்கு இழுத்தது.
நீ
அவள் பின்னும், 'ஆ, ரோமியோ? நீ ஏன் ரோமியோவா யிருக்க வேண்டும்? நீ ஏன் மாண்டேகு ஆயிருக்க வேண்டும்? அக் கொடியர்களை விட்டுவிட்டு வேறு பெயர் கொள்ளலாகாதா? என் மனத்தில் உள்ள காதலின் ஒரு பகுதி மட்டும் உன் மனத்தில் இருந்தால் இப்பெயர்களை உதறித் தள்ளிவிட மாட்டாயா? அப்படி நீ தள்ளாவிட்டால், இதோ நான் தள்ளுகிறேன். நான் ஜூலியட்டல்லள், கப்பியூலத்து அல்லள் என்று வைத்துக் கொள்க' என்றாள்.
காதல்
போட்டிக்கழைத்த அழைப்புப் போன்ற இம்மொழிகளுக்கு ரோமியோவால் விடை கொடுக்காமல் இருக்க முடியவில்லை. எனவே, அவன் 'நானுந்தான் இனி' ரோமியோ அல்லன்; மாண்டேகு அல்லன்; உன்னைக் கண்டபோதே நான் மீண்டும் பிறந்தேன். நீ இனி எனக்கு என்ன பெயரிட்டழைப்பாயோ அதுவே என் பெயராகும். நீ காதல் என்றோ, கண்மணி என்றோ, வேறெப்படி வேண்டுமாயினும் அழைத்துக் கொள்க' என்றான்.
தான் தனிமையாய் இருப்பதாக நினைத்ததற்கு மாறாக வேறு ஏதோ குரல், அதுவும் ஆடவர் குரல் கேட்பது கண்டு திகில்கொண்டு ஜூலியட் கதவை அடைத்துவிட்டு உட்செல்ல
ருந்தாள். ஆனால் ரோமியோ, என் ஜூலியட்; உன் மனக்கதவைத் தான் திறந்துவிட்டாயே; இனி ஏன் இவ்வெளிக் கதவைச் சாத்திவிட்டு ஒளிக்கவேண்டும்' என்றான்.
அப்போதுதான் அவளுக்கு, அவன் தன் உள்ளங் கோயில் கொண்ட தலைவனே என்பது விளங்கிற்று.
பசிப்பிணி தீரக் கூழில்லையே என்று வருந்துபவன் முன் முக்கனியும் தேனும் கலந்த இன்னுணவு வைக்கப்பட்டா லெப்படியோ,அப்படியிருந்தது ஜூலியட்டுக்கு ரோமியோவின்
வரவு!