250
அப்பாத்துரையம் - 37
3. காதலர் கண்ட இன்பம்
காதல் கூட்டிவைக்கும் என்றால், அவர்கள் காதலைச் சொல்ல வேண்டுமா? ரோமியோ அங்கு வந்து நின்ற அதே சமயத்தில் ஜூலியட்டும் அதே பலகணியின் பக்கத்திலேதான் நின்றிருந்தாள். அவளது காதல் அவள் மனத்துள் அடங்காத தாகத் தோன்றியதனால் அதனைச் சற்றே இவ்வகன்ற உலகில் திறந்து வெளியிடுபவள் போல அவள் பலகணியைத் திறந்து வந்து நின்றாள். பின் தன் காதலேபோல் உயர்ந்தகன்று விரிந்த வானத்திரையில், தன் எண்ணங்களே போல் எண்ண ற்று விளங்கிய விண்மீன்களில் தன் கவனத்தைச் செலுத்தினாள். 'ஆ
காதல், காதல், காதல்; அக்காதல் போயின் சாதல், சாதல்,சாதல்!!
எவ்வளவு பொருத்தமானது இப்பாட்டு' என்றாள் ஜூலியட்டு கீழிருந்து ஒருவன், 'உன் விழியிலே தானே ருக்கிறது, அச்சாதல்' என்றான். அஃது அவள் காதில் விழவில்லை.
66
“ஆ! விருந்தில் ஆடிப் பாடியபோது நீ தெய்வமாது என்பது முற்றிலும் விளங்கவில்லை; இப்போது உன் குரல் வானிலிருந்து வருவது போன்றே இருக்கிறது. உயரப் பறக்கப் போகும் பறவை போலவே நீ வெளியில் அந்தரத்தில் வந்து நிற்கிறாய்?” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் ரோமியோ!
தன் மனத்துட் கொண்ட ரோமியோவைப் பார்த்து அவள் பேசத் தொடங்கினாள். உண்மையில் ரோமியோவே அதனை உற்றுக் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அவள் அறியவில்லை.
66
ஏன்
'ஆ, ரோமியோ, ரோமியோ! நீ ஏன் ரோமியோவாயிருக்க வேண்டும்? மாண்டேகுக் குடியில் நீ ஏன் பிறக்கவேண்டும்? அன்றி, அதுதான் போகட்டும். கடவுள் என்னை ஜூலியட்டாகப் படைக்க வேண்டும்? நான் ஏன் உனக்குப் பகைவர்களான கப்பியூலத்துக் குடியிற் பிறக்கவேண்டும்?" என்றாள்.