சேக்சுபியர் கதைகள் - 2
253
ஒருபுறமும் இழுக்க ஜூலியட் கனிந்த மொழிகள் பேசிப் பிரிவு பெற்றுக்கொண்டாள்.
அவர்கள் பிரிந்தபோது விடியும் நேரமாயிருந்தது. வெளியே நிலவு மங்கிக் கதிரொளி வீசலாயிற்று. ரோமியோவுக்கு அப்போதுதான் பகல் போய் நிலவு வருவதுபோல இருந்தது.
திரும்பத் தன் வீடு சென்று முன்போல் நண்பர்களுடன் பொழுது போக்க அவனுக்கு மனம் வரவில்லை. காதல் நினைவு ஒன்றைத் தவிர வேறெதற்கும் அவன் மனதில் இடமில்லை. எனவே, தன் வீடு செல்லாது நகர்ப்புறத்திலுள்ள ஒரு மடத்தை நோக்கி நடந்தான். அதில் "லாரென்ஸ் என்ற துறவி ஒருவர் உறைந்து வந்தார். அவர் இன்ப வாழ்க்கையைத் துறந்த துறவியேயாயினும் அன்பு வாழ்க்கையைத் துறந்தவர் அல்லர். ரோமியோவிடம்
சிறப்பாக அவர் பரிவுடையவர், ரோஸாலினையே தஞ்சமென அவன் திரியும் காலத்தில், அவர் அவனிடம், ‘அவள் அன்பற்றவள், அவளை நம்பி அலைவானேன். அன்பின் முதல்வனாகிய அருட்கடலை விட்டுவிட்டு இச்சிற்றின்ப வலையிற்பட்டு ஏன் அலைகிறாய்?' என்று அறிவுரை கூறுவார்.
ரோமியோவின் புதிய காதல் வரலாற்றைக் கேட்டதும் முதலில் அவருக்கு நகைப்பு ஏற்பட்டது. 'என்னே! மனிதரின் மடமை? நட்ட நடுவிலிருக்கும் நறுநீர்ச் சுனையை விடுத்து அதனைச் சுற்றி நாற்புறத்திலும் காணப்படும் கானல்நீரைத் தேடி அலைகின்றனரே? ஒரு தடவை இரு தடவை ஏமாந்தால் போதாதா? பின்னும் அவ்வகையிலே புதிய புதிய மாதிரியா ஏமாற்றுக்குள் விழவேண்டும்!' என்று அவர் முணுமுணுத்துக் கொண்டார். அது கேட்டு ரோமியோ, 'அடிகளே! தாங்கள் அறியாதது என்ன? இறைவனது அருளை நேரடியாக அடையச் சிறியேம் தகுதியுடையேம் அல்லமே; பொறுத்தருள்க. எமது கண்ணில் இக்காதலே பெரிதாகப் படுகிறது. அதன் வழியாகவே எம்மைக் கடைத்தேற்றுக' என்றான். துறவியின் ஏளனச்சிரிப்பும் புன்முறுவலாக மாறிற்று. 'அப்படியே ஆகுக. உனக்க நான் என்ன செய்யவேண்டும் உதவி யாது?' என்றார். ரோமியோ, தான் ஜூலியட்டை மணக்கும்படி உடனிருந்து உதவவேண்டும் என்றான்.