254
|___
அப்பாத்துரையம் – 37
எப்பொருளிலும் நற்பொருளே காணும் பெருந்தகை யோராகிய லாரன்ஸு, ரோமியோ ஜூலியட் ஆகிய இவர்கள் காதலை வற்புறுத்தி மணவினையால் அவர்களைப் பிணைத்து விட்டால் அதன்மூலம் மாண்டேகுக்கள் கப்பியூலத்துக்கள் ஆகிய இரு குடியினரின் பழம் பகையும் ஒழிந்து நகரில் அமைதி நிலவும் என்று மனத்துட் கொண்டார். அவர் இணக்கம் பெற்று ரோமியோவும் ஜூலியட்டுக்குச் செய்தி சொல்லியனுப்பினான். அன்றிரவே, ஜூலியட் பிறரறியாமல் அம்மடத்திற்கு வந்து ரோமியோவை மணந்து கொண்டாள்.
4. துயரமும் பிரிவும்
அன்றிரவு ரோமியோ ஜூலியட்டின் மாளிகைக்கு வந்து அவளைக் காண்பதாய்க் கூறியிருந்தான். அதனையே எண்ணி எண்ணி அவள் போகாத அப்பகலைப் போக்கி வந்தாள்.ஆனால், அப்பகல் அவள் எதிர்பார்த்ததை அவளுக்குக் கொடியதாயிருந்தது.
விட
விருந்து நாளன்றே ரோமியோ மீது கறுவிக்கொண்டு சென்றுடைபால்டு, நகரத்துத் தெருக்களில் மெர்க்குதியோவையும் ரோமியோவையும் கண்டு அவர்களைக் கடுமொழியால் தாக்கினான். இருபக்கத்தினரும் முதலில் வசைமாரியில் தொடங்கி விரைவில் அடிதடி மாரியிலிறங்கினர். ரோமியோ சிலநேரம் இப்பூசலில் கலக்காது அதை விலக்கவே முயன்றான். இயற்கையிலேயே அவனுக்கு இத்தகைய அடிதடிகளில் பற்றில்லை. இப்பொழுதோ கப்பியூலத்து என்ற பெயரே அவன் காதுக்கினிமை தருவதாயிருந்தது. ஆனால், அவன் பின்வாங்கப் பின்வாங்க, டைபால்டு மட்டுக்கு மிஞ்சிச் சீறியெழுந்து அவனைக் கோழை என்றும், பேடி என்றும் வைது தாக்கினான். டைபால்டு பேச்சு வீரனேயன்றி வாள் வீரனல்லன். ஆதலின் ரோமியோவின் தாக்கை எதிர்த்து நிற்கமாட்டாமல் வாளேறுண்டு மாண்டான். அடிதடியோடு இங்ஙனம் கொலையும் சேர நகர மாந்தர் அனைவரும் பெருங்கலவரம் அடைந்தனர். விரைவில் எள்விழ டமின்றி எங்கும் மக்கள் திரண்டெழுந்தனர்.
நகரின் நிலை கண்டு கலக்கமுற்ற நகர்த்தலைவனும் சண்டை நடந்த இடத்துக்கு வந்து இருதிறத்தாரையும் நிறுத்தி