உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

273

உடன் சென்றாள். அவர்கள் அனைவரும் நகர்ப்புறத்துள்ள காட்டின் வழியே சென்று கொண்டிருந்தனர். அக்காட்டில் திருடர் மிகுதி. அத்திருடர் சில நாட்களுக்கு முன் நகரினின்று துரத்தப்பட்ட வலந்தைனைக் கைப்பற்றினர்.ஆனால், வலந்தைன் தன் நாத்திறத்தாலும் உயர்குணத்தாலும் வீரத்தாலும் அத்திருடராலும் போற்றப்பட்டு அவர்கள் தலைவனாய் இருந்து வந்தான்.

ஸில்வியா காட்டு வழியாகச் செல்கையில் வலந்தைன் கூட்டத்திலுள்ள திருடரில் ஒருவன் அவளைக் கைப்பற்றித் தன் தலைவனிடம் கொண்டு செல்ல முயன்றான். அப்போது புரோத்தியஸும் மாற்றுருக் கொண்ட ஜூலியாவும் அங்கே வந்தனர். புரோத்தியஸ் திருடனை வென்று ஸில்லியாவை மீட்டான். ஆயினும், அங்ஙனம் மீட்டதனை ஸில்வியர் பாராட்ட முடியவில்லை. ஏனெனில், மீட்ட மறுநொடியே அவளை அவன் மீண்டும் தொந்தரவு செய்யலானான். அதனை உடனிருந்தும் தடுக்க இயலாத ஜூலியா மனமாழ்கினாள். இத்தறுவாயில், வலந்தைன் அவ்விடம் வந்தான். ஸில்வியா அவனைக் கண்டதும் ஓடி அவனைக் கட்டிக்கொண்டு மகிழ்ந்தாள்.

வலந்தைன் புரோத்தியஸைப் பார்த்து, “அன்பனே, ஏன் உன் இயல்பு மாறி இத்தகைய தகாத செயல்களில் இறங்கினாய்? உன் ஜூலியா இது கேட்டால் என்ன நினைப்பாள்?” என்றான்.

து

அப்போது ஜூலியா தன் ஆணுரு அகற்றி நின்று, “ஜூலியா இஃதனைத்தும் கேட்டதோடு மட்டுமின்றிக் கண்டுந்தான் நிற்கிறாள்” என்றாள்.

நண்பனுக்கும் காதலிக்கும் தான் செய்த நன்றியற்ற செயல்களை எண்ணி புரோத்தியஸ் முகங் கவிழ்த்துத் தன்னை மன்னிக்கும்படி இருவரையும் வேண்டினான்.

வலந்தைன் நண்பன் துயர் கண்டு, கழிந்தன அனைத்தும் மறந்து அவனைத் தழுவினான்.

அவனும் தான் இடையில் கொண்ட நினைவெல்லாம் கனவெனக் கொண்டு, குணம் மாறிப் பழையபடி ஜூலியாவை ஏற்று மகிழ்ந்தான்.