உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

281

ஒத்துழைத்ததெல்லாம் கடமையுணர்ச்சியாலும் நாட்டுப் பற்றாலுமேயன்றி வேறன்று.

ரிச்சர்டின் தீச்செயல்களால் ஏற்பட்ட மனக்கொதிப்பாலும் ஆண்டு முதிர்வாலும் ஜான் ஆவ்காண்டின் உடல்நிலை மிகுதியும் தளர்வுற்றது. இத்தருணத்தில் அவன் மகன் ஹெரிபோர்டு கோமகனாகிய ஹென்றிக்கு நேர்ந்த ஒரு நிகழ்ச்சி அவன் நோயைப் பெரிதும் மிகைப்படுத்தியது.

ஹென்றி ஹெரிபோர்டு முதியோராகிய தன் தந்தை சிற்றப்பர் முதலியோரைப்போல் ரிச்சர்டின் தீச்செயல்களைப் பொறுத்திருக்க விரும்ப வில்லை. அவர்களை ஒத்த உயர்ந்த கடமையுணர்ச்சியும் நாட்டுப் பற்றும் உடையவன் அல்லன் அவன். வாள்வலியால் பெருங்குடி மக்களையும் நயமொழிகளாலும் பகட்டாலும் நடுநிலை மக்களையும் அவன் தன்வயப்படுத்தி வைத்திருந்தான். அதன் பயனாக அவன் ரிச்சர்டின் தீச்செயல்களைச் சாக்காக வைத்துக் கொண்டு நாட்டுமக்களை அவனுக்கெதிராகத் திருப்பியதோடு அவனை வீழ்த்தித் தன் நிலையை உயர்த்தவும் எண்ணங் கொண்டான்.

இவ்வெண்ணங்களை வெளிப்படையாக முதலிலேயே காட்டாமல் படிப்படியாக எதிரிகளையும் அவர்களைச் சேர்ந்தோர்களையும் தொலைக்க எண்ணி அவன் முதலில் கிளஸ்டர் கொலையில் அரசனுக்குத் துணை நின்ற நார்போக் கோமகனை நாட்டுப் பகைவன் என அரசவையிற் குற்றஞ் சாட்டினான். தன் கைக்கருவியைப் பழிப்பது தன்னையே பழித்ததாகும் என்றறிந்தும் ரிச்சர்டு, ஹென்றியை நேரே எதிர்ப்பதை விடப் பிறருடன் மாறுபடச் செய்வதே நன்று என்று எண்ணி அக்குற்றச்சாட்டு வழக்கை மற்போரால் இருவரும் தீர்த்துக் கொள்ளுமாறு பணித்தான். ஆனால், தன் நண்பருடன் உசாவியபின், இம்மற்போர் ஒருவேளை பெரும் போராகித் தன் நிலைக்கு இடுக்கண் விளைக்குமோ என அஞ்சி அவன் அதனை நிறுத்தி இருதிறத்தாரையும் பத்தாண்டு நாடு கடத்தினான்.

ச்செயலால் தன்னை நடுநிலையாளன் என யாவரும் கொள்வர் என்று அவன் நினைத்தான் போலும்! ஆனால் உண்மையில் இதனால் இருதிறத்தாரும் முணுமுணுத்தனரே