உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

283

மகன் நாட்டை விட்டுப் போன நாள் முதலே ஜான் ஆவ் காண்டின் உடல்நிலை முன்னிலும் பன்மடங்கு சீர்கெட்டு அவன் படுக்கையும் பாயும் ஆனான். ரிச்சர்டு அதனைக் கேள்வியுற்றும் சற்றும் பரிவு காட்டாது அவனிடம் கொடுமையாகவே “இன்னும் இறுதிநாள் எவ்வளவு தொலைவி லுள்ளது?” என்று கேட்டான். பின் இறக்கும் தறுவாயில் ஜான் ஆவ்காண்டு தானாகவே ரிச்சர்டைப் பார்க்க விரும்புவதாகச் சொல்லியனுப்பினான். அப்போதும் சமயத்தின் அருமையைக் கூடப் பாராமல் ரிச்சர்டு அவனிடம் அசட்டையான மொழிகள் பேசினான். ஜான் ஆவ் காண்டு தன் அரசாட்சியையும் தன் போக்கையும் குறை கூறுவதைப் பொறாமல் அவனை வெளியேற்றும் படியும் கூறினான். வெளியேறிய சில நொடிகளில் அவன் இறந்தும், ரிச்சர்டு தன் குற்றத்தை ஏற்றுக் கழிவிரக்கங் கொள்ளத் தவறினான்.

2. பகைப் புயல்

மேலும், தந்தையிடம் கொண்ட சீற்றத்தை மகனிடமும் காட்டரிச்சர்டு தயங்கவில்லை. கருவூலம் வெறுமையாயிருந்ததை உன்னி ஜான் ஆவ்காண்டின் நிலங்களையும் உடைமைகளையும் அரசியலுக்கெனப் பறிமுதல் செய்தான். அதோடு அவனது பெருநிலக் கிழமைக்குரிய 15பாலிங் புரோக் கோமகன் என்ற பட்டத்தையும் அவன் மகன் ஹென்றி ஹெரிபோர்டுக்குச் செல்லாமல் தடை செய்தான். அரசவையிலுள்ள நண்பரும் பிறரும் இஃது அடாத செயலெனக் கூறியும் ரிச்சர்டு அவர்களனைவரையும் பொருட்படுத்தாது வாயடக்கினான்.

ரிச்சர்டின் வாழ்க்கைக்கோள் உச்சநிலையைடைந்து திரியத் தொடங்கியது இப்போதுதான் என்னலாகும்.

இது சமயம் ரிச்சர்டின் தீவினைப் பயனாக அயர்லாந்தில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. அதனை அடக்கும் எண்ணத்துடன் ரிச்சர்டு தன் படைகளைத் திரட்டிக்கொண்டு போனான். அயர்லாந்து கிளர்ச்சியை அடக்கப் பல வாரங்களாயின. அது கழிந்து திரும்பும் சமயத்தில் காற்று எதிர்ப்புற மாயடித்ததனால் பின்னும் சில நாள் தாமதமாயிற்று.

த்தனைக்குள்ளாக, இங்கிலாந்தில் ரிச்சர்டுக்கு எதிர்ப்பு வலுத்தது.பகைப் புயல் கிளம்பி அரசியல் வானெங்கும் பரந்தது.