294 ||
அப்பாத்துரையம் – 37
டங்கொடுத்து
அவனுக்கு அவன் தேடும் சாக்கிற்கு இ விடாதீர்கள்” என்றனர்.
ஆனால், ரிச்சர்டின் மனம் வேறு வழியிற் சென்றது. முன்னே பின்னே தன் முடிவு உறுதி என்று அவனுக்கு ஐயமற விளங்கிற்று. தான உரலுக்குள் அகப்பட்டவனே என்று தெரிந்தது. கொஞ்சங் கொஞ்சமாய் நொறுங்கவதைவிட ஒரே இடியாய் இடிபட்டுத் தகர்ந்து பொடியாவது நல்லதல்லவா? பூனையின் கையில் அகப்பட்டஎலி, அப்பூனை தன்னைச் சற்றே விட்டுவிட்டு விளையாட்டுக் காட்டி வதைக்கையில், அதற்கிடங் கொடுக்கும் வகையில் தப்பி ஓடப் பார்க்காமல் அப்பூனையால் உடன் கடித்துக் கொல்லப்படுவதற்குத் தானே வழி பார்ப்பது நல்லதல்லவா? இவ்வெண்ணத்துடன் ரிச்சர்டு ஒருபுறம் பாலிங் புரோக்கின் மறைந்த வஞ்ச எண்ணங்களை வெளிப்படக் கூறிக் கோப மூட்டினான். இன்னொரு புறம் அவன் கூறத் தயங்கிய மொழிகளைத் தானே கூறி, அவன் வேலையை எளிதாக்கினான்.
5. முயலெய்த அம்பும் யானை பிழைத்த வேலும்
ரிச்சர்டைக் கண்டதும் பாலிங் புரோக் படம் எடுக்கப்புகும் பாம்பு பணிந்து வளைவதுபோல் முழங்காலிட்டு வணங்கி நின்றான். ரிச்சர்டு அவனைத் தூக்கி நிறுத்தி, “உள்ளத்தில் ல்லாத பணிவு உடலில் ஏனோ?" என்றான்.
பாலிங் புரோக் தீண்டப்பெற்ற அரவமெனச் சீறி, "ஐயனே, உள்ளத்திற் பணிவு இல்லையெனக் கூறுவது யார்? தன் உரிமைக்குத் தான் போராட வருவதுதான் பணி வின்மையோ? இதுவும் தம் அரசாட்சியின் வண்மை போலும்!” என்றான்.
துகேட்டு ரிச்சர்டு முகம் சிவந்தது. கண்கள் கன்றிப் பனித்தன. உதடுகள் படபடத்தன. அவன் பாலிங் புரோக்கை நோக்கி, "இறைவனால் அமர்த்தப்பட்ட முடியரசு ஆட்சியைப் பழிக்கும் துணிவுடைய மேலோய்! என் ஆட்சியை நீக்கி நும் ஆட்சியை நிறுவுவதாயின் நிறுவுக!” என்றான்.
பாலிங் புரோக்கின் முகம் ஒளி வீசிற்று. குரலில் ஒரு பெருமிதம் எழுந்தது. ஆனால், மாறுதலில்லாத வெற்று