உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

295

மொழிகளில் அவன், "எனக்க உரியதை மட்டுமே யான் தம்மிடம் கோரினேன்” என்று பசப்பினான்.

ரிச்சர்டின் சினம் தலைகால் தெரியாமல் துள்ளிக் குதித்தது. அவன் தீவினை அவன் நாவில் மீண்டும் வந்து நின்றது. நிற்கவே அவன், "அன்பரீர், உமக்குரியதும் உமக்குத் தந்தேன். எனக்குரியதும் உமக்குத் தந்தேன். நானும் இனி உம் உடைமை. இன்னும் என்ன வேண்டும் உமக்கு? நான் உம்முடன் வரவேண்டுமா? எங்க வரவேண்டும்? லண்டனுக்கா வர வேண்டும்?' எனப் பல நாள் கணக்கில் பாலிங் புரோக் படிப்படியாகக் கேட்க இருந்த அத்தனை செய்திகளையும் முன்கூட்டி ஒரே மூச்சில் அவன் முன் அள்ளி வீசினான்.

பிறர் மெய்ப்புக்காக வேண்டா வேண்டா என்று சொல்லிக்கொண்டு கொடுத்ததையெல்லாம் வாங்கி வாங்கித் தின்னும் அலகைகள் போலப் பாலிங் புரோக், "அவ்வளவு நான் எண்ணவில்லை! தாங்கள் அவ்வளவும் ஒருப்படுவதால் அங்ஙனமே ஆகுக. லண்டனுக்கே புறப்படலாம்” என்று கூறிவிட்டுப் பக்கத்தில் நின்றோரிடம் “ரிச்சர்டையும் உடன் கொண்டு லண்டன் நோக்கிப் பயணமாகுக” என்றான்.

ஒருவரும் கவனிக்காமலே ரிச்சர்டு அரசன், ரிச்சர்டு ஆய்விட்டான்.

பாலிங் புரோக், அரசனைச் சிறையாளி போல முன்னே எளிய உடையில் எளிய ஊர்தியில் விட்டுத்தான் நாற்படைசூழ அரச உடையுடன் ரிச்சர்டின் குதிரையிலேறி அணிமணிகளுடன் ஊர்வலம் செல்லும் அரசன் போற் செல்வானாயினான்.

பெருமக்கள் ஆங்காங்கு நின்று, “ரிச்சர்டு வீழ்க, பாலிங்புரோக் ஒங்குக" எனக் கத்தினர்.

"

பொதுமக்கள், பலரும், கொடி பிடித்தவனுக்குக் கோவிந்தாப் போடுமுறையில் கூடிநின்று 'பாலிங் புரோக் வாழ்க, ஹென்றி வாழ்க' என்று தொண்டைகிழியக் கத்தி ஆரவாரித்தனர்.

மாநிலமாளும் மன்னவனுக்கிந்நிலை வந்துற்றதே எனப் பிரிவு

கொண்டவர் மிகச்சிலரே.

ரிச்சர்டின் போக்கு இங்ஙனமிருப்பக் கற்பணிகலமும் பிரான்சின் உதிர்ந்த மென் மலருமாகிய அவனரசி அவன் அரிய