296
அப்பாத்துரையம் - 37
வரவுக்காகக் காத்திருந்து கண் பஞ்சடைந்து ஊணும் உறக்கமும் துறந்து பேய் போலத் தன்னிலை மறந்து நாற்புறமும் ஓடிக் கணவனைத் தேடுவாளாயினள். அவள் நிலை கண்டிரங்கிய சிலர் ரிச்சர்டுக்கு நேர்ந்த பழியையும், லண்டனுக்கு அவன் எடுத்துச் செல்லப்படும் அலங்கோலக் காட்சியையுங் குறித்துக் கூறினர். கணவனிடமே உயிர்வைத்து நடைப்பணிமெனச் சின்னாளாய் வீட்டில் தங்கியும் உலவியும் வந்த அம்மங்கை நல்லாள், உயிரை அணைய விரையும் உடலே போல், லண்டன் நோக்கிச்செல்லும் வழியிற் செல்லலானாள்.
உ
ரிச்சர்டை உடன்கொண்டு லண்டன் சென்ற பெருமக்கள் ஊர்வலம் அரசியற் பெருமன்றங்கூடுமிடமாகிய 19வெஸ்ட் மினிஸ்டர் சென்று சேர்ந்தது. ஆண்டு நின்றும் 'ஹென்றி வாழ்க, பாலிங்புரோக் வாழ்க' என்ற கூக்குரல் வானைப் பிளந்தது. ரிச்சர்டின் பெயரைத் தானுங் கூறுவாரைக் காணோம். குடிகள் அன்பின்மை என்ற நச்சரவங் கண்ட ரிச்சர்டு. அரசியல் வாழ்வில் முற்றிலும் வெறுப்புற்று, 'இம்மக்களையோ இவ் ஹென்றியையோ இனிக் கண்ணிற் காணாதிருக்கும் வரம் தருவாய்' என இறைவனை வபத்தலானான்.
பின் மண்ணுலக வாழ்வை வெறுத்த அம்மன்னன் யாரும் எதிர்பாரா வகையில் நார்தம்பர்லந்தை அழைத்துப், “பெரியீர், வளைந்து வளைந்து செல்வானேன்? நேர்வழியை நான் இணக்கத்துடன் காட்டுகின்றேன். இம்மணிமுடி எனக்கு வேண்டா. நும்தலைவர் அதனை ஏற்கத் திருவுளங் கொள்ளின் ஏற்றருளுமாறு நான் இறைஞ்சுவதாகக் கூறுவீர்” என்றான்.
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வரப்பெற்றது போல் மகிழ்வெய்திப் பாலிங் புரோக், ரிச்சர்டைத் தானே வந்து அரசியல் மன்றில் அதனை விட்டுக் கொடுக்கும்படி வேண்டினான்.
இறப்பினும் மானம் துறவா ஆங்கில அரசர் வழியில் வந்த ரிச்சர்டு, "யான் தற்போது அரசு துறந்து அரசுரிமைப் சாம்பலென நிற்பினும், யான் குடிகள் முன்சென்று று குடிமக்கள் நிலையில் பேச ஒருப்படேன்" என்று மறுத்தான். ஹென்றியும், மாளும் அரியேற்றினிடம் மாளுமுன் எதிர்ப்பது தவறெனக் கொண்டு, தனது வேண்டுகோளை வற்புறுத்தாமல் சற்றுப் பின்வாங்கினான்.