உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

297

ரிச்சர்டு அதன்பின், அரசிருக்கையும், முடியும் தான் ஹென்றியினிடம் ஒப்புவிப்பதாகவும், தான் பிரான்சுக்குச் செல்ல விரும்புவதாகவும் சொல்லியனுப்பினான்.

கொடுப்போர் குலப்பெருமை அறியாத வாங்குவோர் குலத் தோன்றலாகிய ஹென்றி, ரிச்சர்டின் கோரிக்கைகளுள் முன்னதை மட்டும் வெட்டவெளிச்சமாக மன்றத்தார் முன் வாசித்துக் காட்டிப் பின்னதை அடக்கிக் கொண்டான்.

ஹென்றி பாலிங் புரோக், பெருமக்கள் தலைவனாக யார்க் கோமகன் துணை செல்லக், கான்ரிபெர்த் தலைமகன் வழிகாட்ட, அரசிருக்கையேறி, மேளதாளங்களுக்கிடையே மணிமுடி அணிவிக்கப் பெற்றான்.

20

தலைமக்கள், 21பெருமக்கள், 22பொதுமக்கள் ஆகிய 23மும்மண்டலத்த வரும் போற்ற, நானிலமெங்கும் புகழலை வீச, "பாலிங் புரோக் வாழ்க. நான்காம் ஹென்றி வாழ்க" என்ற ஆரவாரங்களுக்கிடையே அன்று ஹென்றி முடிசூட்டப்

66

பெற்றான்.

ரிச்சர்டு என்னும் ஞாயிறு அரசியல் வானில் மேல்பால் கண்கவர் சிறப்புடனும் நல்லோர் மனத்துயராகிய நிழற்படங் களுடனும் மறையவும், ஆங்க வளர்பிறை முதற் கலைபோலும் பெருமிதத்துடன் ஹெனறி என்னும் மதிக்கொழுந்து மேலேழுந்தது.

6. தோல்வியில் வெற்றி

புதிய முடிசூட்டு விழாவில் கறை ஒன்றே ஒன்றுதான். ‘புலனழுக்கற்ற அந்தணாள' னாகிய கார்லைல் தலைமகன் அரசியல் மன்றில் முடிசூட்ட முன் எழுந்து, “அரசர் என முடிசூட்டப் பெறப்போகும் பாலிங் புரோக் பெருமகனாரே! அரசர் அரசிருக்கை ஏறுவதும் துறப்பதும் மக்கள் விருப்பு வெறுப்பாலன்று; இறைவன் திருவுளப் போக்கு ஒன்றினால் மட்டுமே ஆகக் கூடியது என்று அறிவீர். ரிச்சர்டுக்குரிய இவ்வரசுரிமையை அவனிடமிருந்து பறிக்கவோ, மேற்கொள்ளவோ உமக்கு என்ன தகுதி உண்டு? இறைவன் முன்னிலையில் ரிச்சர்டே அரசர்; அதுருவே என் கொள்கை; பிற அறிவுடையோர் கொள்கையும் அதுவேயாம். உமக்கஞ்சி உம்மை ஏற்கும்