உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

21

களத்தில் வென்றிபெற்ற சங்கமித்தனை' யே மாணிக்க வாசகராகக் கூறாநிற்பர். மாணிக்கவாசகர் தில்லைத் திருக்கோயிற் கூடிய அவைக்களத்தே பௌத்தரை வென்றா ரென்று திருவாதவூரர் புராணம் நுவலுகின்றதேயல்லாமல், அவர் இலங்கைக்குச் சென்று அவர்களை வென்றாரென்று நுவல்கின்றிலது. அதனால், இலங்கையிற் இலங்கையிற் பௌத்தரை வென்றவர் மாணிக்கவாசகர் அல்லர். அவராற் சைவசமயந் தழீஇ அவர்க்கு மாணாக்கராம் உரிமை பெற்ற ‘சங்கமித்தரே’ யாவரென்பது பகுத்துணர்ந்துகொள்க.

இனி, இவ்வாறு சோழநாட்டினின்றும் இலங்கையுட் புகுந்த வேதுல்யமதத்தைப் பற்றியும், அதற்கும் இலங்கைப் பௌத்தர்க்கும் நடந்த வழக்கைப்பற்றியும், 'மகாவம்ஸம்' புகலும் செய்திகளெல்லாம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் நான்காம் நூற்றாண்டின் துவக்கத்திலும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பனவாய் இருக்கின்றனவேயல்லாமற், கல்வெட்டுகளிற் காணப்படும் வரகுணபாண்டியர் இருவர் காலத்திலும் நிகழ்ந்தவைகளைக் குறிப்பினவாயில்லை. கி.பி. 350 ஆம் ஆண்டிற்குப்பின் பௌத்தமதம் இந்தியா இலங்கை யென்னும் இரண்டிடங்களிலும் வரவரக் கிளர்ச்சி குன்றிப் போய்விட்டது; அதனைக் கைக்கொண் டொழுகுவோர் தொகையும் வரவரச் சுருங்கிப்போய் விட்டது. மேலும், ஒன்பதாம் நூற்றாண்டினரான வரகுண பாண்டியர் காலத்திற் சோழமன்னர் வலிகுன்றி ஒளிமழுங்கி யிருந்தமை மேலே காட்டினாமாகலின், அக் காலத்திருந்த சோழனுக்கு இலங்கை மன்னன்கீழ் அடங்கிக் கடமை செலுத்தினவன் ஆதல் செல்லாது.

அதுவேயுமன்றி, ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியி லிருந்த இரண்டாம் வரகுணபாண்டியன் இலங்கையின் மேலும் படையெடுத்துச் சென்றானென்பது முன்னே காட்டின மாதலின், அக்காலத்தில் மாணிக்கவாசகர்க்கும் இலங்கைப் பௌத்தர்க்கும் தில்லையிற் வழக்கு நடத்திருத்தலும் ஆகாது. அதன்பொருட்டுக் கூட்டப்பட்ட அவைக்களத்திற் சோழ மன்னன் தலைவனாய் வீற்றிருக்க அவனுக்கு அப்போது இலங்கை மன்னன் கடமை கொணர்ந்து வைத்து வணங்கினா னென்றலும் ஆகாது. இவ் விரண்டாம் வரகுணன் இலங்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/30&oldid=1588267" இலிருந்து மீள்விக்கப்பட்டது