உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

  • மறைமலையம் - 23

வை

இனிச் சங்கராச்சாரியாராற் பரப்பப்பட்ட மாயாவாத வேதாந்தக் கொள்கைகள் இவையென்பதை ‘மாணிக்கவாசகர் வரலாறு’விலும், சைவசமயக் கோட்பாடுகள் யென்பதையும் முன்னமேயே விளக்கிக் காட்டியிருக்கின்றேம். அங்ஙனம் எடுத்துக்காட்டிய சைவசமயக் கோட்பாடுகள் எல்லாவற்றிற்கும் மேற்கோள்களும் ஆண்டே உடனெடுத்துக் காட்டியிருக்கின்றேம். அவ் விருவேறு கோட் பாடுகளையும் ஒப்பிட்டு நோக்குவார்க்கு மாணிக்கவாசகர் தெளிந்த சைவ சித்தாந்தச்செல்வரே யாவரல்லது. எல்லா வாற்றானும் பொருந்ததாய்ப் புரைப்பட்டு நிற்கும் மாயாவாத வேதாந்தக் கொள்கை ஒரு தினையளவும் உடையரல்லரென்பது ஐயுறவின்றிப் பட்டப்பகற்போல் விளங்கிக்கிடக்கும். இவ்வாறு விளங்கிக் கிடப்பவும் இவ் வுண்மையினை ஒரு சிறிதாயினுந் வ் தெளிந்துணரமாட்டாத தமிழ் வரலாறு’ உடையார் ஏகான்மவாத வாடை மாணிக்கவாசகர் மாட்டும் வீசியதாகத் தமக்குத் தோன்றியவாறே கூறினார். அதற்கவர்கொண்ட சான்று என்னையெனின்; தேவாரம் அருளிச்செய்த அப்பர் சம்பந்தர் முதலான ஆசிரியர் தாம் சிவமானதாக யாண்டும் உரையாதிருக்க. அடிகளோ “சிவமாக்கி ஏனை ஆண்ட” எனக் கூறியது ஒன்றாம். அப்பர், "தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும்யானும் ஆகின்ற தன்மையனை" (பொது. மறுமாற்றத் திருத்தாண்டகம். 7ஆம் செய்யுளில்) என்று அருளிச் செய்ததனையும், சம்பந்தர், “அப்பரிசிற் பதியான அணிகொள் ஞானசம்பந்தன் என “உருவார்ந்த” என்னுந் திருப்பிரம புரப்பதிகம் 11ஆஞ் செய்யுளில் அருளிச்செய்ததனையும் அவர் அறிந்திலர்போலும்!

D

மேலுஞ், 'சிவம் ஆதல்' என்னுஞ் சொற்றொடரைக் கண்ட துணையானே அது மாயாவாதப் பொருளை யுணர்த்து மென்றல், அதுபற்றி யெழும் மாயாவாதக் கோட்பாட்டிற்கும் சைவசித்தாந்தக் கோட்பாட்டிற்கும் உள்ள வேறுபாட்டினைப் பகுத்துணர மாட்டாதார் கூற்றாம். அழுக்குப்போக மினுக்கிய ஒரு செம்பின் கட்டிக்கும். இயற்கையிலேயே அழுக்கின்றி மின்னும் ஒரு செம்பொற் கட்டிக்கும் உள்ள இயற்கை வேறுபாட்டினை யறியாமற் புறத்தே அவையிரண்டும் ஒரே நிறத்தனவாய்த் தோன்றுதல் ஒன்றேபற்றி அவை யிரண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/35&oldid=1588287" இலிருந்து மீள்விக்கப்பட்டது