உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

25

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் வரையப்பட்டு வருகின்றது. திருமூலநயனார் திருவாவடுதுறையி லெழுந்தருளி யிருந்து 'திருமந்திரம் மூவாயிரஞ் செய்யுட்கள்' அருளிச் செய்தமை சேக்கிழார் அடிகள் அருளிச்செய்த ‘திருத் தொண்டர் புராணம்' என்னும் பெரிய புராணத்தால் நன்கு விளங்குவதோடு, திருமூல நாயனாரே ‘திருமந்திரத்’திற்

“சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற் சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.”15

எனவும்,

“மூலன் உரைசெயத மூவாயிரந் தமிழ் மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம்

மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே.'

எனவும் ஓதுமாற்றானுங் தெளியப்படும். ஆகவே, தாம் சிவபிரான் திருவடிநீழல் எய்துகின்றுழித், திருமூலநாயனார் தாம் இயற்றி யருளிய ‘திருமந்திர நூலின்’ ஏட்டுச் சுவடியை ஆண்டுள்ள திருக்கோயிற் பலிபீடத்தினடியில் ஒருசிறு செப்புப் பேழையிற் புதைத்துவைத்துச் சென்றமை உண்மையேயாதல் வேண்டு மென்க. இவ் வுண்மை வரலாறுகொண்டு திருமூல நாயனாரும் அவரியற்றியருளிய 'திருமந்திர'மும் ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்திற்கு முற்பட்டே இருந்தமை தெற்றென விளங்கா நிற்கும். எனவே, 'திருமந்திர’ நூலின் காலம் ஆறாம் நூற்றாண்டின் இடைக்கண்ணதாகக் கோடலே பொருத்த மாதல் காண்க. அங்ஙனம் தேவாரத்திற்கும் முற்பட்டதாகிய திருமந்திரத்தில் ஐயைந்து மாயாவாதிக்கே7 என மாயாவாதப் பெயரும் அதனால் உணர்த்தப்படுங் கொள்கையும் ஒருங்கு கூறப்பட்டிருத் தலின், ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ்நூல்களில் எங்கும் மாயாவாதம் என்னும் பெயராதல் கொள்கையாதல் காணப்படவில்லை யென்னுந் ‘தமிழ் வரலாறு' உடையார் கூற்று முழுப் பொய்யாதல் காண்க. தமது காலத்திற்கு முன்னரேயிருந்த மாயாவாதந் தமது நோக்கத்திற்கு இசைந்ததாயிருந்தமை கண்டே சங் கராசாரியார் அதனைப் பெரிதுமுயன்று எங்கும் பரவச் செய்தனர். அது கிடக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/34&oldid=1588286" இலிருந்து மீள்விக்கப்பட்டது