உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

க்

மறைமலையம் - 23 ×

வாத மாயா வாதத்தைச்’ சைவத் துறவி வேடம் புனைந்து கொண்டு சங்கராசாரியர் இவ் விந்தியாநாடெங்கணும் பரப்பியபின் அச்சொல் முதலிற் றான் உணர்த்திய புத்தசமயப் பொருளை யிழந்து ஏகான்மவாதப் பொருளைப் பெறுவதா யிற்று. ஆகவே, இக் காலத்தில் இயற்றப்பட்ட சூடாமணி நிகண்டில் ‘மாயாவாதம்’ என்னுஞ் சொல் ஏகான்மவாததின் மேற்றாய்க் குறிக்கப்பட்டிருத்தல் பற்றி ஈண்டைக்காவதோர் இழுக்கில்லை. அதனால் அடிகள் சங்கராசாரியர்க்குப் பிற்பட்டவராதலுஞ் செல்லாது அடிகள் காலத்து வழங்கிய மாயாவாதமும் சங்கரர் காலத்து வழங்கிய மாயாவாதமும் வெவ்வேறாதல் கண்டுகொள்க.

L

நாயானார் தாம் அருளிச்செய்த

""

னி, ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ் நூல்களிற் எங்கும் ‘மாயாவாதம்' என்னுஞ் சொல்லாதல். அதன் கொள்கையாதல் காணப்படுகின்றிலது எனத் 'தமிழ் வரலாறு’ உடையார் கூறினர் ஒன்பதாம் நூற்றாண் துவக்கத்தில் இருந்தவராக இப்போது வரலாற்றுநூற் புலவரெல்லாரானுங் கொள்ளப்படுஞ் சுந்தரமூர்த்தி திருத்தொண்டத் தாகை'யில் “நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் என்று குறிப்பிட்டிருத்தலின், திருமூல நாயனாரும் அவர் அருளிச்செய்த 'திருமந்திரம் மூவாயிரம்’ ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல் தெள்ளிதிற் றுணியப்படும். இன்னும், 'திருஞானசம்பந்தப் பெருமான்' திருவாடுதுறையிற் றிருக்கோயில்கொண்டு எழுந்தருளியிருக்குஞ் சிவபிரானை வணங்கச்சென்றக்கால், அக்கோயிலின் பலிபீடத் தருகே தமிழ்மணங் கமழக் கண்டு அதனை அங்கு உடன் நின்றார்க்கு அறிவிப்ப, அவரிற் சிலர் அப் பலிபீடத்தருகே அகற்றிப் பார்த்தலும், அதனடியிற் புதைத்து வைக்கப்பட்டிருந்தது புலனாக அதனை எடுத்துப் பிரித்து நோக்கியவழி அது திருமூல நாயனார் அருளிச் செய்த திருமந்திரமாயிருத்த லுணர்ந்து, அவர் அதன் அருமைபெருமை களை விரித்துரைத்துப் பின்னர் அதனை இத் தமிழ்நா டெங்கணும் பரவச் செய்தனர்' என்னும் ஒரு வரலாறு தொன்றுதொட்டு வழங்கிவருகின்றது; இவ் ரு வரலாறு 'தேவாரத்திருமுறை'யில் திருவாவடுதுறைத் திருஞான சம்பந்தர் திருப்பதிகத்தின் கீழேயும் நெடுங்காலமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/33&oldid=1588283" இலிருந்து மீள்விக்கப்பட்டது