உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

11. வீடுபேற்றின் கண்ணும்

உயிர்கள் உளவாதல்

இனிச், சைவசித்தாந்திகள் ‘சிவம் ஆதல்' என்னும் அச் சொற்றொடர்க்குக் கூறும் பொருள் யாதோவெனிற் கூறுதும்; மலம், மாயை, வினை என்னும் மூன்றும் எக்காலத்தும் இல்லாத வெறும் பொய்ப்பொருள்களாயின், என்றும் உள்ள சிவம் அவற்றாற் பற்றப்படுவ தென்றேனும் அல்ல தவற்றாற் பற்றப்பாடத தென்றேனும் உரைக்கும் உரைக்குப் பொருள் சிறிதும் இல்லை. ஆமை மயிரிற்றிரித்த கயிற்றால் அவ் ஆன்கன்றைக் கட்டிவைத்தான் அல்லது வைத்திலன்' என்னுஞ் சொற்றொடரை ஒருவன் சொல்லியவழி அதற்குப் பொருள் காணப்புகுவாரைப் போல், உண்மையில் இல்லாத மும்மலங்க னாற் சிவம் கட்டுப்பட்டதெனவாதல் அல்லது இல்லதென வாதல் கூறுவாருரையும் நகையாடற் பாலதேயா மாகலின், இறைவன் மும்மலங்களாற் பற்றப்பட்டானென்று உரைப்பினும் அவை மூன்றும் என்றுமுள்ள பொருள்களென்றே கொள்ளல் வேண்டும். தூய பசும்பொன் எக்காலத்துங் களிம்பினாற் பற்றப்படாதவாறு போல. இயற்கையே விளங்கிய அறிவினால் எல்லா ஆற்றலும் உடையதாகிய சிவமும் மும்மலங்களாற் பற்றப்படாததாகும்.

மேலும், சிவம் எக்காலத்தும் ஒரு பெற்றித்தாய் விளங்கும் பேரறிவுப் பொருளாகலின், அஃரெருகாலத்து மாயையாற் கவரப்பட்டு அறியாமை யுடையதாயிற் றென்றலும். பின்னர் அவ்வறியாமை நீங்கித் தன் நிலையில் நிற்கு மென்றலும் ஒவ்வா ஒவ்வாவாகவே என்றும் ஒரு தன்மைத்தாய் நிற்குஞ் சிவத்தைச் ‘சிவம்ஆதல்' என்று ஆக்கச் சொற் கொடுத்துக் கூறுதலும் ஒவ்வாதாம். மற்று, ஒருகாற் சிவம் ஆகாவாயிருந்து பின்னரொரு காற் சிவமாக நிலைமாறுவனவற்றையே அவ்வாறு 'சிவமாதல்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/38&oldid=1588291" இலிருந்து மீள்விக்கப்பட்டது